அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

ஹைட்ரஜன் எரிபொருள் செல் பொருத்தப்பட்ட இந்தியாவின் முதல் காரின் செயல் விளக்கத்தை சிஎஸ்ஐஆர்-கேபிஐடி அளித்தது

Posted On: 10 OCT 2020 5:52PM by PIB Chennai

ஹைட்ரஜன் எரிபொருள் செல் பொருத்தப்பட்ட இந்தியாவின் முதல் காரின் சோதனை ஓட்டத்தை அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி மன்றம் (சிஎஸ்ஐஆர்) மற்றும் கேபிஐடி ஆகியவை வெற்றிகரமாக செய்து காட்டின.

உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டுள்ள இந்த எரிபொருள் செல் அடுக்கு, குறைந்த தட்பவெப்பத்தில் செயல்பட்டு (65 - 75 டிகிரி செண்டிகிரேட்) வாகன பயன்பாடுகளுக்கு பொருத்தமாக இருக்கும்.

இதை உருவாக்கிய குழுக்களை பாராட்டிய சிஎஸ்ஐஆர்-என்சிஎல் இயக்குநர் பேராசிரியர் அஸ்வினி குமார் நாங்கியா, "ஹைட்ரஜன் சார்ந்த புதுப்பிக்கத்தக்க எரிபொருளை பயன்படுத்துவதற்கான நேரம் வந்துவிட்டது," என்றார்.

மேலும் பேசிய அவர், இது பெட்ரோல், டீசல் இறக்குமதியை குறைப்பதோடு இல்லாமல், ஹைட்ரஜன் தூய்மையான எரிபொருள் என்பதால் சுற்றுப்புற சூழலுக்கும் நன்மை பயக்கும் என்றார்.

இந்த குறிப்பிடத்தகுந்த சாதனையைப் பற்றி கருத்து தெரிவித்த கேபிஐடி தலைவர் திரு ரவி பண்டிட், "இந்த தொழில்நுட்பத்திற்கு நல்ல எதிர்காலம் உள்ளது. மேலும் இது உள்நாட்டிலேயே உருவானது என்பதால் வர்த்தக ரீதியாகவும் உகந்ததாக இருக்கும்," என்றார்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1663396

----- 


(Release ID: 1663421)