ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்

குஜராத் மாநில உரங்கள் மற்றும் ரசாயனங்கள் நிறுவனம் தயாரித்த கால்சியம் நைட்ரேட் & போரோனேட்டட் கால்சியம் நைட்ரேட் என்ற உள்ளூர் வகை உரத்தை திரு.மாண்டவியா தொடங்கி வைத்தார்

Posted On: 09 OCT 2020 11:16AM by PIB Chennai

குஜராத் மாநில உரங்கள் மற்றும் ரசாயனங்கள் இந்தியா லிமிடெட் நிறுவனம் தயாரித்த கால்சியம் நைட்ரேட் & போரோனேட்டட் கால்சியம் நைட்ரேட் என்ற உள்ளூர் வகை  உரத்தை மத்திய ரசாயனங்கள் மற்றும் உரங்களுக்கான அமைச்சர் மற்றும் கப்பல் போக்குவரத்துறை இணையமைச்சர் திரு. மன்சுக் மாண்டவியா காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

கால்சியம் நைட்ரேட் & போரோனேட்டட் கால்சியம் நைட்ரேட் முதன் முறையாக இந்தியாவில் தயாரிக்கப்படுகிறது. இதுவரை நமக்குத் தேவையான இந்த உரம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் பேசிய திரு. மாண்டவியா, “பிரதமர் திரு. நரேந்திர மோடி விடுத்த அழைப்பை செயல்படுத்தும் வகையில், ஆத்மநிர்பார் பாரத் மற்றும் ஆத்மநிர்பார் கிருஷி-யை நோக்கி உர நிறுவனம் இந்த தீர்க்கமான நடவடிக்கையை எடுத்துள்ளது,” என்றார்.

குஜராத்தின் பாவ்நகர் மற்றும் இமாசலப் பிரதேசத்தின் சோலானில் இருந்து  முதன் முறையாக இந்த இரண்டு பொருட்களை சில்லறை சந்தையில்  குஜராத் மாநில உரங்கள் மற்றும் ரசாயனங்கள் இந்தியா லிமிடெட் (ஜிஎஸ்எஃப்சி) நிறுவனம் தொடங்கி இருக்கிறது. ஆண்டுக்கு 10,000 மெட்ரிக் டன்கள் என்ற கொள்ளவில் இந்த இரண்டு பொருட்களிலும் ஜிஎஸ்எஃப்சி மொத்த உற்பத்தியை இப்போது தொடங்கி உள்ளது. மூன்று மாதத்துக்குள் ஆண்டுக்கு 15000 மெட்ரிக் டன் அளவுக்கு உற்பத்தி அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 9 முதல் 12 மாதங்களுக்குள் 30,000 மெட்ரிக் டன்னாக உற்பத்தியை அதிகரிக்க ஜிஎஸ்எஃப்சி திட்டமிட்டிருப்பதாக மத்திய அமைச்சர் கூறினார்.

இந்த இணையவழி தொடக்க நிகழ்வில் நாடு முழுவதும் உள்ள ஜிஎஸ்எஃப்சி மண்டல அலுவலகங்களும் பங்கேற்றன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தியை பார்க்கவும்;

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1662969

----- 



(Release ID: 1663139) Visitor Counter : 215