பிரதமர் அலுவலகம்

பிரதமர் மக்கள் இயக்கத்தை தொடங்கி வைத்தார் கொவிட்டுக்கு எதிரான பேராட்டத்தில் அனைவரும் இணைய வேண்டுகோள்

Posted On: 08 OCT 2020 9:28AM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி கொவிட்டுக்கு எதிரான மக்கள் இயக்கத்தை இன்று தொடங்கி வைத்தார். கொரோனாவுக்கு எதிரான பேராட்டத்தில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.

இது குறித்து டிவிட்டரில் அவர் விடுத்துள்ள செய்தியில், கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில், அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என பிரதமர் வேண்டுகோள் விடுத்தார்.  ‘‘முக கவசம் அணிய வேண்டும், கை கழுவ வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், 6 அடி தூரம் நடைமுறையை பின்பற்ற வேண்டும்’’ என்று  வலியுறுத்தியுள்ள பிரதமர், நாம் ஒன்றாக வெற்றி பெறுவோம், கொரோனாவை வெல்வோம் என கூறியுள்ளார்.

மக்கள் பங்களிப்பை ஊக்குவிக்கும் வகையில், பிரசாரம் தொடங்கப்பட்டுள்ளது. இந்தப் பிரசாரத்தின் கீழ் கொவிட்-19 உறுதிமொழி அனைவராலும் எடுக்கப்படும்ஒரு ஒருங்கிணைந்த செயல் திட்டம் பின்வரும் சிறப்பம்சங்களுடன், மத்திய அமைச்சகங்கள் / அரசு துறைகள் மற்றும் மாநில அரசுகள் / யூனியன் பிரதேசங்களால் அமல்படுத்தப்படும்:

 

 *   அதிக பாதிப்புள்ளள மாவட்டங்களில், குறிப்பிட்ட இலக்குடன் தகவல் தொடர்பு.

* ஒவ்வொருவரையும் சென்றடையும் வகையில் எளிமையான, புரிந்து கொள்ளக்கூடிய தகவல்கள் 

 * நாட்டில் உள்ள அனைத்து ஊடக தளங்கள் மூலமாக தகவல் பரப்புதல்

* பொது இடங்களில் பேனர்கள் மற்றும் போஸ்டர்கள்; முன்னணி தொழிலாளர்களை ஈடுபடுத்துவது, அரசு திட்டங்களின் பயனாளிகளை குறிவைத்து பிரசாரம் செய்வது

* கொரோனா பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த, அரசு அலுவலக வளாகங்களில், பேனர்கள், சுவர் விளம்பரங்கள், எலக்ட்ரானிக் அறிவிப்பு பலகைகளை பயன்படுத்துவது

* தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்க்க, உள்ளூர் மற்றும் தேசிய பிரபலங்களை ஈடுபடுத்துவது

 * வழக்கமான பிரசாரத்துக்கு, வேன்களைப் பயன்படுத்துதல்

* விழிப்புணர்வு பற்றிய ஆடியோ தகவல்கள்; துண்டு பிரசுரங்கள்/ கையேடுகள்

* கொவிட் தகவல்களை ஒளிபரப்ப, உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்களின் உதவியை நாடுதல்

* தகவல்கள் மக்களை சென்றடைந்து, நல்ல பயனை ஏற்படுத்த ஊடக தளங்களில் ஒருங்கிணைந்த பிரசாரம்.

 

டிவிட்டரில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள  பிரசாரம்:

# கொரோனாவை எதிர்த்து போராட நாம் ஒன்றினைவோம்.

 

இதனை நாம் எப்போதும் நினைவில் கொள்வோம்:

முகமூடி அணியவும்.

கைகளைக் கழுவவும்.

சமூக இடைவெளியை பின்பற்றவும்.

‘6 அடி தூர இடைவெளியைபின்பற்றவும்.

ஒன்றாக இணைந்து, நாம் வெற்றி பெறுவோம்.

ஒன்றாக இணைந்து , நாம் கொரோனாவை   வெல்வோம்.



(Release ID: 1662613) Visitor Counter : 219