சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கொரோனா நோய் தொற்றில் தற்சமயம் பாதிக்கப்பட்டவர்கள் விகிதம் இந்தியாவில் சீரான அளவில் குறைந்து வருகிறது

Posted On: 06 OCT 2020 11:37AM by PIB Chennai

கொரோனா நோயாளிகளின் மொத்த விகிதத்தில் தற்சமயம் பாதிக்கப்பட்டவர்கள் விகிதம் இந்தியாவில் சீரான வகையில் குறைந்து வருகிறது. நாட்டின் மொத்த பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,19,023 ஆக இருக்கும் நிலையில் தற்சமயம் பாதிக்கப்பட்டவர்கள் வெறுமனே 13.75 சதவிகிதமாக இருக்கிறது

நோய்தொற்றில் இருந்து குணம் அடைவோரின் சதவிகிதம் அதிகரிப்பதுடன் ஒப்பிடும்போது தற்சமயம் பாதிக்கப்பட்டவர்களின் விகிதம் குறைவான போக்கில் உள்ளது.

மொத்த குணம் அடைந்தோரின் எண்ணிக்கை 56,62,490 ஆக இருக்கிறது. குணம் அடைவோர் மற்றும் தற்சமயம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆகியவற்றுக்கு இடையேயான இடைவெளி 47 லட்சத்தைக் கடந்துள்ளது. (47,43,467). குணம் அடைவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், தொடர்ந்து இந்த வித்தியாசம் அதிகரிக்கிறது.

அதிக எண்ணிக்கையில் குணம் அடைவோரின் எண்ணிக்கை என்பது தேசிய குணமடைவோர் விகிதத்தில் 84.70% ஆக முன்னேற்றம் அடைய உதவுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 75,787 பேர் குணம் அடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். புதிய நோய் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 61,267 ஆக இருக்கிறது.

25 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் புதிதாக நோய் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையை விடவும் குணம் அடைவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

மகாராஷ்டிரா, ஆந்திர பிரதேசம், கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, உத்தர பிரதேசம்,ஒடிசா, டெல்லி, சத்தீஸ்கர் மற்றும் மேற்கு வங்கம்  ஆகிய 10 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் 74 % பேர் புதிதாக குணம் அடைந்துள்ளதை கவனிக்க முடிகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் ஒரே நாளில் அதிகபட்சமாக 13,000 பேர் குணம் அடைந்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 61,267 பேருக்கு நோய் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது பதிவாகி உள்ளது. புதிய நோய் தொற்று பாதித்தோரில் 75 % பேர் 10 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைத் தேர்ந்தவர்கள் ஆவர். மகாராஷ்டிரா மாநிலம் 10,000 பேருக்கு அதிகமாக தொடர்ந்து அதிக எண்ணிக்கையில் தொற்று பாதிக்கப்பட்டுவோரை கொண்டுள்ளது. அந்த மாநிலத்தைத் தொடர்ந்து கர்நாடகாவில் 7,000-த்துக்கும் அதிகமானோர் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 884 பேர் நோய்தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதில் மகாராஷ்டிரா, கர்நாடகா, உத்தரபிரதேசம், தமிழ்நாடு, மேற்கு வங்கம், ஆந்திரா, பஞ்சாப், சத்தீஸ்கர், டெல்லி மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் மட்டும் 80 சதவிகித உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. புதிதாக மகாராஷ்டிராவில் 29 %-த்துக்கும்(263 பேர்) அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1661969

*******

(Release ID: 1661969)


(Release ID: 1661986) Visitor Counter : 219