பிரதமர் அலுவலகம்

சமூக அதிகாரமளித்தலுக்காக பொறுப்புணர்வு உள்ள செயற்கை நுண்ணறிவு 2020 மாநாட்டை அக்டோபர் 5, மாலை 7 மணிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி துவக்கி வைக்கிறார்.

ரெய்ஸ் 2020- செயற்கை நுண்ணறிவு குறித்த மாபெரும் மெய்நிகர் மாநாடு, அக்டோபர் 5 முதல் 9 வரை நடைபெற உள்ளது.
உலகெங்கிலும் உள்ள செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப நிபுணர்கள் கலந்து கொண்டு உரையாடுகின்றனர்.

प्रविष्टि तिथि: 03 OCT 2020 5:30PM by PIB Chennai

ரெய்ஸ் 2020- சமூக அதிகாரமளித்தலுக்காக பொறுப்புணர்வு உள்ள செயற்கை நுண்ணறிவு குறித்த   மாபெரும் மெய்நிகர் மாநாட்டை பிரதமர் திரு நரேந்திர மோடி வரும் 5-ஆம் தேதி மாலை 7 மணிக்கு துவக்கி வைக்கிறார்.

மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகமும் நிதி ஆயோக் உம் சேர்ந்து நடத்தும் இந்த மாபெரும் மெய்நிகர் நுண்ணறிவு மாநாடு வரும் 5-ஆம் தேதி முதல் ஒன்பதாம் தேதி வரை நடைபெறுகிறது.

சுகாதாரம், வேளாண்மை, கல்வி, திறன்மிகு போக்குவரத்து உள்ளிட்ட துறைகளில் செயற்கை நுண்ணறிவின் மூலம் சமூக மாற்றம், உள்ளிணைப்பு, அதிகாரமளித்தல்  குறித்து இந்த சர்வதேச மாநாட்டில் விவாதிக்கப்படவுள்ளது.

செயற்கை நுண்ணறிவின் மூலம் நாட்டின் உள்ளார்ந்த வளர்ச்சியை எட்டுவதே பிரதமர் திரு நரேந்திர மோடியின் நோக்கமான 'சப்கா சாத், சப்கா விகாஸ்திட்டம். பிரதமரின் இந்த தொலைநோக்கு பார்வையினால், வரும் காலங்களில் சர்வதேச அளவில் செயற்கை நுண்ணறிவு துறையில் இந்தியா முன்னோடியாக திகழும்.

****************


(रिलीज़ आईडी: 1661389) आगंतुक पटल : 247
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Assamese , English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Bengali , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam