பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்

‘இந்திய பழங்குடிகள் இ-வணிக சந்தை’ தொடக்கம்

Posted On: 02 OCT 2020 3:13PM by PIB Chennai

 “இந்திய பழங்குடிகள் இ-வணிக சந்தை, இந்தியாவின் பெரிய கைவினைப்பொருட்கள் மற்றும் இயற்கை பொருட்களின் சந்தையாக இருக்கிறது என பழங்குடியினர் இந்தியா இ-வணிக சந்தையின் இணையதளத்தை தொடங்கி வைத்து பேசும்போது மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் திரு.அர்ஜூன் முண்டா கூறினார்.

இந்திய பழங்குடி கூட்டுறவு சந்தைப்படுத்தல் மேம்பாட்டு கூட்டமைப்பின் புதிய நிறுவனமானது, பிரதமரின் இந்தியாவில் தயாரிப்போம் ஆத்மநிர்பார் மற்றும் சுயசார்பு ஆகியவற்றின் நோக்கத்தின் வழியே 2020 அக்டோபர் 2-ல் வந்திருக்கிறது.

இந்த புதுமையான முயற்சியில், நாடு முழுவதும் உள்ள பழங்குடியினர் நிறுவனங்களின் கைவினைப்பொருட்கள் மற்றும் உற்பத்தி பொருட்களை காட்சிப்படுத்தப்படும். தங்களது உற்பத்திக்கு மற்றும் பொருட்களுக்கு நேரடியாக சந்தைப்படுத்த உதவும் பழங்குடியினர் வணிகத்தை டிஜிட்டல் மயமாக்குவதை முன்னெடுப்பதற்கான முக்கியமான விரைவான செயல்பாடாகும். பழங்குடியினர் உறவுகளுக்கான மத்திய இணை அமைச்சர் திருமதி ரேணுகா சிங், சத்தீஸ்கர் மாநில கிராம தொழில்துறை அமைச்சர் திரு.ருத்ரா குமார், பழங்குடியினர் நலத்துறை அமைச்சகத்தின் செயலாளர் திரு தீபக் காந்தேகர், TRIFED-ன் தலைவர் திரு.ரமேஷ் சந்த் மீனா, TRIFED அமைப்பின் நிர்வாக இயக்குனர் திரு.பர்வீர் கிருஷ்ணா ஆகியோர் முன்னிலையில் இந்த இணையதளம் தொடங்கப்பட்டது. அமைச்சகத்தின் மற்றும் TRIFED மூத்த அதிகாரிகளும் உடன் இருந்தனர்.

இந்த நிகழ்வின் போது பேசிய திரு.அர்ஜூன் முண்டா, “நாடு முழுவதும் உள்ள இயற்கை உணவுப் பொருட்கள் மற்றும் பல்வேறு கைவினை மற்றும் கைத்தறி பொருட்களில் பல்வேறு மூலப்பொருட்களை உற்பத்தி செய்யும் 5 லட்சம் பழங்குடியின உற்பத்தியாளர்களை இணைப்பதை நோக்கமாக கொண்டு TRIFED வழியே ஒரு லட்சிய முயற்சியாக பழங்குடியினர் இந்தியா இ-வணிக சந்தை இருக்கிறது. உங்களுக்கு சிறந்த பழங்குடியினப் பொருட்களை கொண்டு வருவதாகவும் இருக்கிறது.  தனிப்பட்ட பழங்குடியின  கைவினைஞர்கள், பழங்குடியின சுய உதவிக்குழுக்கள், அமைப்புகள், முகமைகள், பழங்குடியினருக்காக பணியாற்றும் தன்னார்வ அமைப்புகள் ஆகியோரைக் கொண்டதாக விநியோகிப்பாளர்கள் இருப்பார்கள். TRIFED-ன் விற்பனை நிலையங்கள் மற்றும் இ-வணிக பங்குதாரர்கள், அதே போல தங்களது சொந்த கணக்கான இ-வணிகம், தங்களது சொந்த சில்லறைவிற்பனையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் வழியே தங்களது பொருட்களை விற்பதற்கான ஒரு சில்லறை விற்பனை வசதியை பழங்குடியின விநியோகஸ்தர்களுக்குக் கொடுப்பதற்கான தளம் இதுவாகும்என்றார். 

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1660996

****************



(Release ID: 1661045) Visitor Counter : 561