பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்

பழங்குடியினர் பொருட்களுக்கான மிகப்பெரிய சந்தையை திரு அர்ஜுன் முண்டா நாளை துவக்கி வைக்கிறார்

प्रविष्टि तिथि: 01 OCT 2020 3:41PM by PIB Chennai

 பழங்குடியின மக்கள் தயாரிக்கும் பொருட்களுக்கு மிகப்பெரிய ஊக்கமளிக்கும் விதமாக பழங்குடியினர் பொருட்களுக்கான மிகப்பெரிய சந்தையான 'டிரைப்ஸ் இந்தியா இ-மார்க்கெட் பிளேசை' மத்திய பழங்குடியினர் விவகாரங்கள் அமைச்சர் திரு அர்ஜுன் முண்டா நாளை துவக்கி வைக்கிறார்.

கொல்கத்தா மற்றும் ரிஷிகேஷில் அமைக்கப்பட்டுள்ள இரண்டு டிரைப்ஸ் இந்தியா மையங்களையும் மெய்நிகர் முறையில் திரு அர்ஜுன் முண்டா திறந்து வைக்கிறார்.

இந்திய பழங்குடியினர் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் வளர்ச்சி கூட்டமைப்பின் (டிரைபெட்) பகூர் தேனையும் அமைச்சர் அறிமுகப்படுத்துகிறார்.

வனப் பகுதிகளில் வாழும் பழங்குடியினர் மற்றும் கைவினை கலைஞர்களை தேசிய மற்றும் சர்வதேச சந்தைகளுடன் இந்த நடவடிக்கைகள் இணைக்கும்.

அவர்களுடைய பல்வேறு பொருட்கள் market.tribesindia.com என்னும் இணைய தளத்தில் கிடைக்கும். காந்தி ஜெயந்தி தினமன்று இந்த நிகழ்ச்சி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1660619

****************


(रिलीज़ आईडी: 1660712) आगंतुक पटल : 259
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Urdu , English , Marathi , हिन्दी , Assamese , Manipuri , Bengali , Punjabi , Malayalam