ஆயுஷ்

மருத்துவ குணம் உள்ள தாவரங்களுக்கான பிராந்திய மையத்தை புனேவில் ஆயுஷ் அமைச்சகம் அமைத்தது

प्रविष्टि तिथि: 01 OCT 2020 1:32PM by PIB Chennai

மருத்துவ குணமுள்ள தாவரங்களுக்கான மேற்கு பிராந்திய மையத்தை சாவித்திரிபாய் புலே புனே பல்கலைக்கழகத்தில் ஆயுஷ் அமைச்சகத்தின் செயலாளர் திரு வைத்திய ராஜேஷ் கொட்டேச்சா 2020 செப்டம்பர் 29 அன்று மெய்நிகர் நிகழ்ச்சி ஒன்றில் துவக்கி வைத்தார்.

ஆயுஷ் அமைச்சகத்தின் தேசிய மருத்துவ குணமுள்ள தாவரங்கள் வாரியத்தின் கீழ் இந்த மையம் செயல்படும்.

நாலந்தா பல்கலைக்கழகத்தின் வேந்தர் டாக்டர் விஜய் பட்கர், தாவரவியல் துறையின் தலைவரும் மருத்துவ குணமுள்ள தாவரங்களுக்கான பிராந்திய மையத்தின் ஒருங்கிணைப்பாளருமான பேராசிரியர் டாக்டர் ஏ பி அடே, தேசிய மருத்துவ குணமுள்ள தாவரங்கள் வாரியத்தின் தலைமை செயல் அலுவலர் டாக்டர் ஜெ எல் சாஸ்திரி ஆகியோர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பேசிய திரு கொட்டேச்சா, மருத்துவ குணமுள்ள தாவரங்களை பயிரிடுவதில், வாரியத்தின் நோக்கங்களை பூர்த்தி செய்வதில் மருத்துவ குணமுள்ள தாவரங்களுக்கான பிராந்திய மையம் பெரும் பங்காற்றுவதாகக் குறிப்பிட்டார்.

தற்சார்பு இந்தியா இயக்கத்தின் கீழ் மருத்துவ குணமுள்ள தாவரங்களைப் பயிரிடுவதற்கு ஆயுஷ் அமைச்சகம் ஊக்கம் அளித்து வருவதாக அவர் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1660570

 

********


(रिलीज़ आईडी: 1660663) आगंतुक पटल : 234
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Bengali , Assamese , Punjabi , Telugu