எரிசக்தி அமைச்சகம்
மத்திய மின்துறை அமைச்சகத்துடன் எஸ்ஜே வி என் நிறுவனம். 2020 - 21 ஆம் ஆண்டுக்கான இலக்குகளை விவரித்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது
प्रविष्टि तिथि:
30 SEP 2020 4:40PM by PIB Chennai
எஸ் ஜே வி என் நிறுவனம், மத்திய அரசுடன் 2020 - 21 ஆம் ஆண்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் இன்று கையெழுத்திட்டது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், மத்திய மின் துறை செயலர் திரு. எஸ் என் சகாய்; எஸ் ஜே வி என் நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குனருமான திரு. நந்த் லால் சர்மா ஆகியோர் காணொளி மாநாடு மூலமாகக் கையெழுத்திட்டனர்.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள இலக்குகளின் படி, இந்த ஆண்டில் ‘எக்சல்லெண்ட்’ மிகச்சிறந்த பிரிவு என்ற பிரிவின் கீழ் 9680 மில்லியன் யூனிட் மின் உற்பத்தியைஎட்ட எஸ் ஜே வி என் முயற்சி செய்யும். முதலீட்டு செலவின இலக்கு 2880 கோடி ரூபாய் என்றும், பணப்புழக்க இலக்கு 2800 கோடி ரூபாய் என்றும் ’எக்சல்லெண்ட்’ மிகச்சிறந்த பிரிவு என்ற பிரிவின்கீழ் எஸ்ஜேவிஎன் அடைய வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவைதவிர இயக்கத் திறன், திட்ட கண்காணிப்பு ஆகியவை தொடர்பான இலக்குகளும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1660312
(रिलीज़ आईडी: 1660556)
आगंतुक पटल : 200