சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கொவிட்-19 சமீபத்திய தகவல்கள்: 14 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் அதிக பரிசோதனைகளையும், குறைவான பாதிப்புகளையும் கொண்டு வருகின்றன

Posted On: 23 SEP 2020 1:20PM by PIB Chennai

தினசரி 12 லட்சத்துக்கும் அதிகமான பரிசோதனைகளோடு இந்தியாவின் பரிசோதனைத் திறன் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் 6.6 கோடிக்கும் அதிகமான பரிசோதனைகள் இதுவரை செய்யப்பட்டுள்ளன.

அதிக அளவிலான பரிசோதனைகளின் மூலம் பாதிப்புகள் விரைவில் கண்டறியப்பட்டு வருகின்றன. இதன்மூலம் தொற்று விகிதம் குறையும் என்று ஆதாரங்கள் கூறுகின்றன.

14 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் அதிக பரிசோதனைகளையும், குறைவான பாதிப்புகளையும் கொண்டு வருகின்றன. 10 லட்சம் மக்கள் தொகையில் அதிக நபர்களுக்கு இம்மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் பரிசோதனை நடத்தும் நிலையில், உறுதியாகும் தொற்றுகள் தேசிய சராசரியை விட குறைவாகவே உள்ளன.

 

உறுதியாகும் தொற்றுகளின் தேசிய சராசரி 8.52 சதவீதமாக இருக்கும் நிலையில், 10 லட்சம் பேரில் 48,028 நபர்களுக்கு இன்றைய நிலையில் பரிசோதனை நடத்தப்படுகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் 83,347 புதிய தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளன. உறுதிப்படுத்தப்பட்ட பாதிப்புகளில் 74 சதவீதம் 10 மாநிலங்கள் யூனியன் பிரதேசங்களில் இருந்து பதிவாகியுள்ளது.

மேலும் விவரங்களுக்கு, இந்த செய்தி குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1658089

------  



(Release ID: 1658153) Visitor Counter : 184