சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கொவிட் தொற்றிலிருந்து அதிகளவில் குணமடைவது தொடர்கிறது

Posted On: 23 SEP 2020 11:00AM by PIB Chennai

தீவிர யுக்திகள் மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளால், நாட்டில் கொவிட் தொற்றிலிருந்து குணமடைபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கிறது. கடந்த 5 நாட்களாக, நாட்டில் தினந்தோறும் குணமடைபவர்களின் எண்ணிக்கை, புதிய நோயாளிகளின் எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 89,746 பேர் குணமடைந்துள்ளனர். அதே நேரத்தில் 83,347 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது.

இத்துடன் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை  45,87,613-ஆக உள்ளது. குணமடைந்தோர் வீதம் இன்று  81.25%-ஆக உள்ளது.

உலகளவில் இந்தியாவில் குணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகம். உலகளவில் குணமடைபவர்களில் இந்தியாவின் பங்கு 19.5%.

17 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் புதிய நோயாளிகளை விட, குணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகளவில்  உள்ளது.

குணமடைந்தவர்களில் 75% பேர் மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, உத்தரப் பிரதேசம் மற்றும் தமிழ்நாடு, ஒடிசா, தில்லி, கேரளா, மேற்குவங்கம் மற்றும் ஹரியானாவைச் சேர்ந்தவர்கள்.

மஹராஷ்டிராவில் புதிதாக 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்  குணமடைந்துள்ளனர், ஆந்திராவில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.


(Release ID: 1658044) Visitor Counter : 198