சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

உலகளாவிய கொவிட்19 குணமடைதல்களில் அமெரிக்காவை இந்தியா முந்தி முதலிடத்தில் உள்ளது

Posted On: 19 SEP 2020 11:00AM by PIB Chennai

கொரோனாவை எதிர்த்து தொடர்ந்து போராடி வரும் இந்தியா, தொற்றின் பரவலை குறைப்பதற்கும், குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும், இறப்புகளை குறைப்பதற்கும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

 

இதன் விளைவாக,  உலகளாவிய கொவிட்19 குணமடைதல்களில் அமெரிக்காவை இந்தியா முந்தி முதலிடத்தில் உள்ளது. மொத்த குணமடைதல்கள் 42 லட்சத்தை தாண்டியுள்ளது.

 

மத்திய அரசு தலைமையிலான கவனம் மிகுந்த, திட்டமிட்ட மற்றும் திறன்மிகு நடவடிக்கைகள் மூலம் அதிக எண்ணிக்கையிலான பரிசோதனைகளை நடத்தப்பட்டு, பாதிப்புகள் விரைவில் கண்டறியப்பட்டு, சரியான கண்காணிப்பு, தடமறிதல் மற்றும் உயர்தர சிகிச்சை ஆகியவற்றின் மூலம் இந்த உலகளாவிய சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

 

இந்தியாவின் மொத்த குணமடைதல்களின் எண்ணிக்கை 42,08,431 ஆக தற்போது உள்ள நிலையில், உலகின் ஒட்டுமொத்த குணமடைந்தோரின் எண்ணிக்கையில் இது 19 சதவீதம் ஆகும்.

 

தேசிய குணமடைதல் விகிதம் தற்போது 80 சதவீதத்தை (79.28%) நெருங்கியுள்ளது. நாட்டில் குணமடைந்தவர்கள் 90 சதவீதம் பேர் 16 மாநிலங்களில் உள்ளனர்.

 

மேலும் விவரங்களுக்கு, இந்த செய்தி குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும்:

 

https://pib.gov.in/PressReleseDetailm.aspx?PRID=1656571 



(Release ID: 1656615) Visitor Counter : 143