உள்துறை அமைச்சகம்
பிரதமர் திரு.நரேந்திர மோடியின் பிறந்தநாளில் மத்திய உள்துறை அமைச்சர் திரு.அமித் ஷா வாழ்த்து
இடுகை இடப்பட்ட நாள்:
17 SEP 2020 1:36PM by PIB Chennai
மத்திய உள்துறை அமைச்சர் திரு.அமித் ஷா, பிரதமர் திரு.நரேந்திர மோடியின் பிறந்தநாளான இன்று அவருக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். திரு.அமித் ஷா வெளியிட்டுள்ள பல டுவிட்டர் பதிவுகளில், “நாட்டுச் சேவைக்கும், ஏழை மக்களின் நலனுக்காகவும் தம்மை அர்ப்பணித்துக் கொண்டுள்ள, தேசத்தின் மிகப் பிரபலமான தலைவர் பிரதமர் திரு.நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். பல்வேறு மக்கள் நலக் கொள்கைகள் வாயிலாக ஒடுக்கப்பட்ட பிரிவினரை மைய நீரோட்டத்தில் இணைத்து, வலுவான இந்தியாவுக்கு அடித்தளமிட்டிருக்கும் பிரதமர் மோடி அவர்களின் வடிவில் தேசம் தனது தலைவரைப் பெற்றிருக்கிறது” என்று கூறியுள்ளார்.
வீட்டுவசதி, மின் சக்தி, ஏழை மக்களுக்கான வங்கிக் கணக்குகள், கழிப்பறை வசதிகள், ஏழை தாய்மார்களுக்கு உஜ்வாலா திட்டம் வாயிலாக சமையல் எரிவாயு வசதி போன்ற பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதற்கு காரணம், பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களின் அர்ப்பணிப்பு உணர்வும், நிறைவேற்றியே தீருவது என்ற மன உறுதியும்தான் என்று திரு.அமித் ஷா தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு, இந்த செய்தி குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1655529
•••••
(வெளியீட்டு அடையாள எண்: 1655585)
வருகையாளர் எண்ணிக்கை : 159
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam