ஆயுஷ்

இந்திய முறை மருத்துவம் மற்றும் ஹோமியோபதி கல்விக்கு புரட்சிகரமான புத்தாக்கம் கிடைக்கவிருக்கிறது

Posted On: 15 SEP 2020 12:15PM by PIB Chennai

ஆயுஷ் அமைச்சகத்தின் இரண்டு முக்கிய மசோதாக்களை நாடாளுமன்றம் நிறைவேற்றியிருப்பதன் மூலம், இந்திய முறை மருத்தும் மற்றும் ஹோமியோபதி கல்விக்கு புரட்சிகரமான புத்தாக்கம் கிடைக்கவிருக்கிறது.

இந்திய மருத்துவ முறைக்கான தேசிய ஆணையம் மசோதா, 2020, மற்றும் ஹோமியோபதிக்கான தேசிய ஆணையம் மசோதா, 2020, ஆகியவை மக்களவையால் 2020 செப்டம்பர் 14 அன்று நிறைவேற்றப்பட்டது.

ஏற்கனவே உள்ள இந்திய மருத்துவ மத்தியக் குழு சட்டம், 1970 மற்றும்  ஹோமியோபதி மருத்துவ மத்தியக் குழு சட்டம், 1973 ஆகியவற்றை இந்த இரண்டு புதிய மசோதாக்கள் மாற்றியமைக்க விழைகின்றன.

இந்த இரு மசோதக்களுக்கும் மாநிலங்களவை 2020 மார்ச் 18 அன்று ஒப்புதல் அளித்தது. இந்த மசோதக்களுக்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதல் கிடைத்துள்ளது ஆயுஷின் வரலாற்றில் ஒரு முக்கிய சாதனையாகும்.

மேலும் விவரங்களுக்கு, இந்த செய்தி குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும்

 

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1654384

 

*******



(Release ID: 1654445) Visitor Counter : 234