பிரதமர் அலுவலகம்

திரு ஹரிவன்ஷ் நாராயண் சிங் மாநிலங்களவையின் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்த பிரதமரின் உரையின் முக்கிய அம்சங்கள்

Posted On: 14 SEP 2020 7:32PM by PIB Chennai

மாநிலங்களவைத் துணைத் தலைவராக 2வது முறை தேர்வு செய்யப்பட்டதற்கு, நாடாளுமன்றம் சார்பாகவும், நாட்டு மக்களின் சார்பாகவும் திரு.ஹரிவன்ஷ் நாராயண் சிங்குக்கு, எனது வாழ்த்துகளைத் தெரிவித்து கொள்கிறேன்.

சமூக சேவை மற்றும் பத்திரிக்கை துறையில் திரு. ஹரிவன்ஷ் நேர்மையானவராக திகழ்ந்ததற்காக, அவர் மீது அதிக மரியாதை வைத்திருக்கிறேன்.  இன்று இதே உணர்வு மற்றும் மரியாதை, அவையில் உள்ள ஒவ்வொரு உறுப்பினரிடம் உள்ளது.

திரு.ஹரிவன்ஷின் பணியாற்றும் விதம்அவையை நடத்தும் விதம், அவையில் ஜனநாயகத்தை வலுப்படுத்தியதில் அவரின் பங்கு ஆகிய அனைத்தும் பாராட்டுக்குரியது.

தலைவர் அவர்களேஅவையை சுமூகமாக நடத்த, மாநிலங்களவை உறுப்பினர்கள், துணைத் தலைவருக்கு உதவியாக இருப்பார்கள் என நான் நம்புகிறேன்.  எதிர்கட்சியினர் உட்பட ஒவ்வொருவருக்கும் சொந்தமானவர் ஹரிவன்ஷ், அவர் எந்த கட்சிக்கும் பாகுபாடு காட்டியதில்லை.  விதிமுறைகள் படி நாடாளுமன்ற உறுப்பினர்களை செயல்பட வைப்பது மிகவும் சவாலான பணி, இதில் அனைவரது நம்பிக்கையையும் ஹரிவன்ஷ் பெற்றுள்ளார்.

மசோதாக்களை நிறைவேற்ற ஹரிவன்ஷ், தொடர்ச்சியாக மணிக்கணக்கில் அவையில் இருந்துள்ளார். இதில் அவரது வெற்றியை நாம் கடந்த 2 ஆண்டுகளில் பார்த்தோம். நாட்டின் எதிர்காலத்தை மாற்றிய, பல வரலாற்று சிறப்புமிக்க மசோதாக்கள் இந்த அவையில் நிறைவேறியுள்ளன. 10 ஆண்டுகளில் அதிகளவிலான பணிகளை இந்த அவை நிறைவேற்றியுள்ளது. இந்த அவையில் அதிகளவிலான பணிகள் நடந்ததோடு, நேர்மறையும் அதிகரித்துள்ளது. ஒவ்வொரும் தங்கள் கருத்தை சுதந்திரமாக தெரிவிக்க முடிந்தது.

எளிமையான பின்னணியில் இருந்து வந்ததால், ஹரிவன்ஷ் எளிமையாகவே உள்ளார்.  அரசின் முதல் கல்வி உதவித் தொகையை ஹரிவன்ஷ் பெற்றபோது, அதை அவர் வீட்டுக்கு எடுத்துச்  செல்லாமல் புத்தகங்கள் வாங்கினார். அவர் புத்தகங்களுடன் நெருங்கிய தொடர்புடையவர். ஜெயப்பிரகாஷ் நாரயணால் கவரப்பட்டவர் ஹரிவன்ஷ். 40 ஆண்டுகளாக சமூக சேவையாற்றிய பின், அவர் நாடாளுமன்றத்துக்கு கடந்த 2014-ல் நுழைந்தார். ஹரிவன்ஷ் தனது எளிமையான நடத்தை மற்றும் பணிவால்  அறியப்பட்டவர்.

நாடாளுமன்றங்களுக்கு இடையேயான அமைப்பு போன்ற சர்வதேச அரங்கிலும், பிற நாடுகளில் இந்தியா கலாச்சார குழு உறுப்பினராகவும் இந்தியாவின் நிலையை உயர்த்தஹரிவன்ஷ் பணியாற்றினார்..

மாநிலங்களவையின் பல குழுக்களுக்கு தலைவராக இருந்து ஹரிவன்ஷ், அவற்றின் செயல்பாடுகளை மேம்படுத்தினார்.  நாடாளுமன்ற உறுப்பினராக ஹரிவன்ஷ் ஆன பின்பு, அனைத்து உறுப்பினர்களும் நெறிமுறையுடன் செயல்படுவதை உறுதி செய்ய அவர் முயற்சிகள் எடுத்தார். நாடாளுமன்ற பணிகள் மற்றும் பொறுப்புகளில், ஹரிவன்ஷ் தீவிரமாகவும், அறிவுஜீவியாகவும், சிந்தனையாளராகவும் இருந்தார். 

ஹரிவன்ஷ், இன்னமும், நாடு முழுவதும் பயணம் செய்து, நாட்டின் பொருளாதாரம், சமூக மற்றும் அரசியல் சவால்கள் போன்றவற்றை மக்களிடம் எடுத்துரைக்கிறார்.  அவரது புத்தகம், நமது முன்னாள் பிரதமர் திரு.சந்திரசேகரின் வாழ்க்கையையும், ஹரிவன்ஷின் எழுத்து திறமையையை வெளிப்படுத்துகிறது.

அவையின் துணைத் தலைவராக, ஹரிவன்ஷின் வழிகாட்டுதலை பெறும் பாக்கியத்தைநானும் மற்ற அவை உறுப்பினர்களும் பெற்றுள்ளோம். ஹரிவன்ஷ் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

*****************



(Release ID: 1654379) Visitor Counter : 137