பிரதமர் அலுவலகம்

'கிரகப்பிரேவசம்' நிகழ்ச்சியில் செப்டம்பர் 12-ஆம் தேதி அன்று பங்கேற்கும் பிரதமர், பிரதமர் வீட்டுவசதி திட்டத்தின் கீழ் மத்தியப் பிரதேசத்தில் கட்டப்பட்ட 1.75 லட்சம் வீடுகளை திறந்து வைக்கிறார்

Posted On: 10 SEP 2020 5:38PM by PIB Chennai

'கிரகப்பிரேவசம்' நிகழ்ச்சியில் செப்டம்பர் 12-ஆம் தேதி அன்று காணொலி மூலம் பங்கேற்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி, பிரதமர் வீட்டுவசதி திட்டத்தின் கீழ் மத்தியப் பிரதேசத்தில் கட்டப்பட்ட 1.75 லட்சம் வீடுகளை திறந்து வைக்கிறார்.
அனைத்து வீடுகளும் தற்போதைய சவாலான கொவிட்-19 பெருந்தொற்று காலத்தில் கட்டப்பட்டன/முடிக்கப்பட்டன. 

மத்தியப் பிரதேச முதல்வரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். டிடி நியூஸ் தொலைக்காட்சியில் இந்த நிகழ்ச்சி நேரடியாக ஒளிபரப்பப்படும்.

பின்னணி:

"2022-க்குள் அனைவருக்கும் வீடு" என்று பிரதமர் அறைகூவல் விடுத்ததை தொடர்ந்து, பிரதமர் வீட்டு வசதித் திட்டம்-கிராமப்புறம் (PMAY-G) திட்டம் 2016 நவம்பர் 20 அன்று தொடங்கப்பட்டது. இது வரை 1.14 கோடி வீடுகள் இந்தத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. 

மத்தியப் பிரதேசத்தில், 17 லட்சம் ஏழை குடும்பங்கள் இந்தத் திட்டத்தின் மூலம் இது வரை பயனடைந்துள்ளன.  இவர்களெல்லாம் சொந்த வீடுகள் இல்லாதவர்கள், அல்லது சிதிலமடைந்த வீடுகளில் வாழ்ந்தவர்கள்.

இத்திட்டத்தின் கீழ், ஒவ்வொரு பயனாளிக்கும் 100 சதவீதம் நிதியுதவி வழங்கப்படுகிறது. இதில் மத்திய மற்றும் மாநில அரசுகள் முறையே 60 மற்றும் 40 சதவீத செலவினை ஏற்றுக்கொள்கின்றன. இந்தத் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் நிதியுதவி நான்கு தவணைகளாக வழங்கப்படுகிறது. 2022-க்குள் 2.95 கோடி வீடுகளைக் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு, இந்த செய்தி குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும்

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1652910



(Release ID: 1653115) Visitor Counter : 159