சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

விரைவு பரிசோதனையில் பாதிப்பு கண்டறியப்படாத நிலையில் அறிகுறியுடன் உள்ளவர்களுக்கு RT-PCR பரிசோதனை மேற்கொள்ள சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

Posted On: 10 SEP 2020 12:43PM by PIB Chennai

சில பெரிய மாநிலங்களில் விரைவு பரிசோதனையில்(RAT) பாதிப்பு கண்டறிப் படாதவர்கள் தொற்று அறிகுறியுடன் உள்ளனர். அவர்களுக்கு RT-PCR செய்யப்படவில்லை.  அவர்களுக்கு RT-PCR பரிசோதனை  மேற்கொள்ளப்பட வேணடும் என ஐசிஎம்ஆர் மற்றும் மத்திய சுகாதார அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளன. 

விரைவு பரிசோதனையில் தொற்று கண்டறிப்படாதவர்களுக்கு காய்ச்சல் அல்லது இருமல் அல்லது மூச்சுத் திணறல் போன்ற அறிகுறிகள்  உள்ளன. 
விரைவு பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்படாதவர்களுக்கு, 2 முதல் 3 நாளில் மீண்டும் அறிகுறிகள் ஏற்பட்டுள்ளன. 
இது போன்ற சூழலில், விரைவு பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்படாதவர்களுக்கு அறிகுறிகள் இருந்தால் அவர்களுக்கு கண்டிப்பாக RT-PCR பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளது. 

மேலும் விவரங்களுக்கு, இந்த செய்தி குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும்

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1652922


(Release ID: 1653006) Visitor Counter : 160