நிதி ஆணையம்
15-வது நிதி ஆணையத்தின் பொருளாதார ஆலோசனைக் குழு நாளை கூடவிருக்கிறது
Posted On:
03 SEP 2020 1:12PM by PIB Chennai
பதினைந்தாவது நிதி ஆணையத்தின் தலைவர் திரு என் கே சிங் மற்றும் உறுப்பினர்கள், ஆணையத்தின் பொருளாதார ஆலோசனைக் குழுவுடன் நாளை நாள் முழுவதும் கூட்டமொன்றை நடத்தவிருக்கிறார்கள்.
"மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியின் மீதான் இறுதி ஆலோசனை, மத்திய அரசு மற்றும் மாநிலங்களின் வரி நிலைமை, சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீடு, வருவாய்ப் பற்றக்குறை மானியம் மற்றும் நிதி ஒருங்கிணைப்பு" ஆகியவற்றை குறித்து இந்தக் கூட்டம் விவாதிக்க இருக்கிறது.
பொருளாதார ஆலோசனைக் குழுவின் கீழ்கண்ட உறுப்பினர்கள் நாளைய கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பினாகி சக்ரபொர்தி, டாக்டர் பிரச்சி மிஸ்ரா, டாக்டர் ஓம்கார் கோசுவாமி, டாக்டர் சஜ்ஜித் செனாய், டாக்டர் நீல்கந்த் மிஸ்ரா, டாக்டர் ரத்தின் ராய், டாக்டர் டி கே ஸ்ரீவத்ஸவா, டாக்டர் அர்விந்த் விர்மானி, டாக்டர் எம் கோவிந்த ராவ், டாக்டர் சுதிப்தோ முண்ட்லே, டாக்டர் சங்கர் ஆச்சார்யா, டாக்டர் புரொனாப் சென், டாக்டர் கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன்.
***
(Release ID: 1650958)
Visitor Counter : 234