சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

ஒரே நாளில் அதிக எண்ணிக்கையில் கோவிட்-19 மருத்துவப் பரிசோதனை செய்ததில் இந்தியா மற்றும் ஒரு சாதனை

Posted On: 30 AUG 2020 11:56AM by PIB Chennai

கோவிட்-19 பாதிப்புக்கு எதிரான நடவடிக்கைகளில் இந்தியா மேலும் ஒரு முக்கியமான மைல்கல்லைக் கடந்துள்ளது. முதன்முறையாக ஒரே நாளில் 10.5 லட்சம் கோவிட் மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

கடந்த 24 மணி நேரத்தில் 10,55,027 மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டது. தினமும் 10 லட்சம் சாம்பிள்களுக்கு மேல் பரிசோதனை செய்யக் கூடிய திறனை தேசிய அளவில் இந்தியா பெற்றுள்ளது.

இந்தச் சாதனையுடன் சேர்த்து, ஒட்டுமொத்தமாக இந்தியாவில் இதுவரை 4.14 கோடி (4,14,61,636) மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

மருத்துவப் பரிசோதனைகள் எண்ணிக்கை திறன் மேம்பட்ட காரணத்தால், ஒரு மில்லியனுக்கு எவ்வளவு பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது என்ற எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இன்றைய நிலவரத்தின்படி ஒரு மில்லியன் பேருக்கு 30,044 பேர் என்ற அளவுக்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்யப் பட்டுள்ளன.

 

மருத்துவப் பரிசோதனை வசதியை அதிகரிக்கும் முயற்சியில், தேசிய அளவில் ஆய்வக வசதிகள் அதிகரித்துள்ளன. இன்று அரசுக்குச் சொந்தமான 1003 ஆய்வகங்கள், தனியார் துறையில் 580 ஆய்வகங்கள் என மொத்தம் 1583 ஆய்வகங்களில் இந்தப் பரிசோதனை வசதிகள் உள்ளன.

Real-Time RT PCR அடிப்படையிலான ஆய்வகங்கள்: 811 (அரசு : 463 + தனியார் : 348)

TrueNat அடிப்படையிலான ஆய்வகங்கள் : 651 (அரசு : 506 + தனியார் : 145)

CBNAAT அடிப்படையிலான ஆய்வகங்கள் : 121 (அரசு : 34 + தனியார் : 87)



(Release ID: 1649826) Visitor Counter : 197