சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில், 22 சதவீதத்தினருக்கு மட்டுமே மருத்துவ கவனிப்பு தேவை
தற்போது 26 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர், இது சிகிச்சையில் இருப்பவர்களைவிட 18 லட்சம் அதிகமாகும்
प्रविष्टि तिथि:
28 AUG 2020 12:06PM by PIB Chennai
மத்திய அரசின் உத்திகளை, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் சிறந்த முறையில் செயல்படுத்தி வருவதால், குணம் அடைபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும், உயிரிழப்பு விகிதமும் குறைந்துள்ளது. கடந்த ஐந்து மாதங்களில் கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களில், 75 சதவீதத்தினர் குணமடைந்துள்ளனர் மீதம் உள்ள 25 சதவீதத்தினர் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனர்.
மிதமான மற்றும் நடுத்தர அளவில் கொவிட்-19 தொற்று பாதிப்புடையவர்கள், வீடுகளில் தனிமைப்படுத்தப்படுவதிலிருந்தும், மருத்துவமனைகளிலிருந்தும் குணமடைந்து திரும்பியுள்ளனர். இந்தியாவில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 26 லட்சத்தை நெருங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 60,177 பேர் குணமடைந்துள்ளனர். இத்துடன் சேர்த்து குணமடையும் தேசிய சராசரியானது 76.28 விழுக்காட்டை எட்டியுள்ளது.
மருத்துவக் கண்காணிப்பில் உள்ளவர்களைவிட சுமார் 3.5 மடங்கு அதிகமான எண்ணிக்கையில் நோயாளிகள் குணமடைந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் இது 21.9 விழுக்காடாகும். குணமடைந்தவர்கள் மற்றும் மருத்துவக் கண்காணிப்பில் இருப்பவர்களுக்கு இடையேயான இடைவெளி 18 லட்சத்தைக் கடந்து இன்று 18,41,925 ஆக உள்ளது.
மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகளை மத்திய அரசு நாடெங்கிலும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் 1723 பிரத்யேக கொவிட் மருத்துவமனைகளும், 3883 பிரத்யேக கொவிட் கவனிப்பு மையங்களும், 11,689 கொவிட் கவனிப்பு மையங்களும் நமது நாட்டில் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் கொவிட் -19 நோயாளிகளுக்கென 15,89,105 தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகளும், 2,17,128 ஆக்சிஜன் வசதியுள்ள படுக்கைகளும், 57,380 அவசர சிகிச்சை வசதிக்கான படுக்கைகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சிறப்பான மருத்துவ வசதிகளால் குணமடைவோர் விகிதம் அதிகரித்து, இறப்பு விகிதம் 1.82 விழுக்காடாக இன்று குறைந்துள்ளது.
-----
(रिलीज़ आईडी: 1649177)
आगंतुक पटल : 308
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam