சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
இந்தியாவில் குணமடைந்தோர் எண்ணிக்கை 23 லட்சத்தை தாண்டியது
குணமடைந்தோர் எண்ணிக்கை தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களை விட மூன்று மடங்குக்கும் அதிகம்
குணமடைந்தோர் எண்ணிக்கை தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களை விட 16 லட்சத்துக்கும் அதிகம்
Posted On:
24 AUG 2020 12:46PM by PIB Chennai
தனிமைப்படுத்தப்பட்ட அதிக நோயாளிகள் (லேசான மற்றும் மிதமான பாதிப்பு உள்ளவர்கள்) குணமடைந்து வருவதாலும், மருத்துவமனைகளில் இருந்து குணமடைந்து ஏராளமானோர் வெளியேறுவதாலும், இந்தியாவில் கோவிட்-19 நோயிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 23 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
தீவிர பரிசோதனை மூலம் நோய்த்தொற்று முன்னதாகவே கண்டுபிடிக்கப்படுவதாலும், விரிவான கண்காணிப்பு மற்றும் தொடர்பைக் கண்டறிதல், செயல்திறன் மிக்க மருத்துவ சிகிச்சை ஆகியவை காரணமாக, 23,38,035 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். தரமான ஆக்சிஜன் பயன்பாடு, தீவிர சிகிச்சைப் பிரிவு மற்றும் மருத்துவமனைகளில் திறமை மிக்க மருத்துவர்கள், மேம்படுத்தப்பட்ட ஆம்புலன்ஸ் சேவைகள் உள்ளிட்ட நிலையான கவனிப்பு விதிமுறைகள் காரணமாக, கடுமையாகப் பாதிக்கப்பட்ட நோயாளிகளும், நிலை மோசமடைந்தவர்களும் குணமடைந்து, குணமடைவோர் விகிதம் அதிகரித்துள்ளது. வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களும், மருத்துவக் கண்காணிப்பு மற்றும் கவனிப்பின் பயனாக விரைந்து குணமடைகின்றனர்.
கடந்த 24 மணி நேரத்தில், 57,469 பேர் குணமடைந்ததைத் தொடர்ந்து, கோவிட்-19 நோயாளிகளில் குணமடைந்தோர் விகிதம் 75 சதவீதத்தைக் (75,27%) கடந்துள்ளது. கடந்த பல மாதங்களாக குணைமடைவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதை இது காட்டுகிறது.
இந்தியாவில் குணமடைந்தோர் எண்ணிக்கை, தற்போது பாதிக்கப்பட்டுள்ள (7,10,177 பேர் தீவிர மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனர்) நோயாளிகளை விட, 16 லட்சத்துக்கும் அதிகமாகப் (16,27,264) பதிவாகியுள்ளது. சாதனை அளவிலான குணமடைதல் விகிதம், நாட்டின் தற்போதைய பாதிப்பு குறைந்துள்ளதை உறுதி செய்துள்ளது. இது மொத்தம் பாதிகப்பட்டவர்களில் 22.88 சதவீதம் ஆகும். தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் அளிக்கப்படும் மிகச்சிறந்த சிகிச்சை, இறப்பு விகிதத்தை வெகுவாகக் குறைத்துள்ளதுடன், தொடர்ந்து அதில் சரிவை ஏற்படுத்தியுள்ளது. இன்று அது மேலும் குறைந்து 1.85 சதவீதமாக இருந்தது.
புதுதில்லி எய்ம்ஸ் மருத்துவமனை, மத்திய சுகாதார அமைச்சகத்துடன் இணைந்து ‘கோவிட்-19 மேலாண்மை குறித்த தேசிய இ-ஐசியு’ என்ற நடைமுறையைப் பின்பற்றி வருவதால், குணமடைதல் அதிகரித்து, இறப்பு விகிதம் குறைத்துள்ளது. இதில், இந்த நடைமுறை முக்கிய பங்கு வகித்துள்ளது. தேசிய இ-ஐசியு நடைமுறை செவ்வாய், வெள்ளி ஆகிய வாரம் இருமுறை மேற்கொள்ளப்படுகிறது. மாநிலங்களில் உள்ள கோவிட் மருத்துவமனைகளின் ஐசியு மருத்துவர்கள் இதில் உள்ளடக்கம். கோவிட் சிகிச்சை பற்றிய கேள்விகளுக்கு இதில் பதில் அளிக்கப்படுகிறது. நாடு முழுவதும் 22 மாநிலங்களின் 117 மருத்துவமனைகள் இதுவரை நடைபெற்ற 14 தேசிய இ-ஐசியு கூட்டங்களில் கலந்து கொண்டன.
****
(Release ID: 1648262)
Visitor Counter : 242
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Malayalam