சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கோவிட் -19க்கு எதிரான போராட்டத்தில் இந்தியா ஒரு முக்கியமான மைல்கல்லைக் கடக்கிறது. ஒரு நாளில் 10 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களை சோதிக்கிறது

Posted On: 22 AUG 2020 12:31PM by PIB Chennai

கோவிட்-19 சோதனைகளை தினமும் 10 லட்சமாக அதிகரிக்கும் உறுதிமொழியைக் கடைப்பிடித்து, இன்று கோவிட்க்கு எதிரான போராட்டத்தில் இந்தியா குறிப்பிடத்தக்க மைல்கல்லை தாண்டியுள்ளது.

 

மத்திய மற்றும் மாநில / யூனியன் பிரதேச அரசாங்கங்கள் உறுதியுடன், நிலையான கவனம் செலுத்திய, ஒருங்கிணைந்த முயற்சிகளுக்கு ஒரு சான்றாக, இந்தியா கடந்த 24 மணி நேரத்தில் 1 மில்லியன் பரிசோதனைகளை நடத்தியுள்ளது. நேற்று 10,23,836 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ள நிலையில், தினமும் 10 லட்சம் மாதிரிகளை பரிசோதிக்கும் தீர்மானத்தை இந்தியா எட்டியுள்ளது.

 

இந்த சாதனையுடன், இதுவரை ஒட்டுமொத்த சோதனைகள் 3.4 கோடிக்கு மேல் (3,44,91,073) என்ற நிலையை எட்டியுள்ளது.

 

http://static.pib.gov.in/WriteReadData/userfiles/image/image0011GQ3.jpg

நிலையான ஏற்றத்தில் தினசரி சோதனைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த மூன்று வாரங்களில் நடத்தபட்ட சராசரி தினசரி சோதனைகள் நாடு முழுவதும் கோவிட்-19 சோதனைகளை மேம்படுத்துவதில் ஏற்பட்ட முன்னேற்றத்தை வலுவாக சித்தரிக்கின்றன.

 

http://static.pib.gov.in/WriteReadData/userfiles/image/image002JHT3.jpg

 

தீவிரமான சோதனையுடன் முன்னேறிய மாநிலங்கள் / யூனியன் பிரதேங்கள் தெரிவித்துள்ளபடி, கோவிட் நோய்த்தொற்று பாதித்தவர்கள் விகிதத்தில் ஒரு விரைவான சரிவு உள்ளது. அதிக எண்ணிக்கையிலான சோதனைகள் ஆரம்பத்தில் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் விகிதத்தின் உயர்வுக்கு வழிவகுக்கும் என்றாலும், உடனடி தனிமைப்படுத்தல், திறமையான கண்காணிப்பு மற்றும் சரியான நேரத்தில் பயனுள்ள மற்றும் மருத்துவ மேலாண்மை போன்ற பிற நடவடிக்கைகளுடன் இணைந்தால் இறுதியில் அது குறையும்.

 

மேம்பட்ட சோதனையுடன் இணைந்து, மத்திய மற்றும் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் கொள்கை முடிவுகள் நாடு முழுவதும் எளிதாக சோதனை செய்ய உதவுகின்றன. இது தினசரி சோதனைத் திறனை உயர்த்தியுள்ளது.

 

மேம்படுத்தப்பட்ட கண்டறியும் ஆய்வக கட்டமைப்பும் இந்த சாதனையில் ஒரு பெரும் பங்காற்றியுள்ளது . இன்று, நாட்டில் 1511 ஆய்வகங்கள், அரசுத்துறையில் 983 ஆய்வகங்கள் மற்றும் 528 தனியார் ஆய்வகங்கள் உள்ளன. வை வருமாறு:

 

  • Real-time RT PCR அடிப்படையிலான சோதனை ஆய்வகங்கள்: 778 (அரசு: 458 + தனியார்: 320)
  • TrueNat அடிப்படையிலான சோதனை ஆய்வகங்கள்: 615 (அரசு: 491 + தனியார்: 124)
  • CBNAT அடிப்படையிலான சோதனை ஆய்வகங்கள்: 118 (அரசு: 34 + தனியார்: 84)

 

**********
 



(Release ID: 1647868) Visitor Counter : 218