உள்துறை அமைச்சகம்

2020 சுதந்திர தினத்தை முன்னிட்டு 926 காவல் பணியாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன

Posted On: 14 AUG 2020 1:41PM by PIB Chennai

2020  சுதந்திர தினத்தை முன்னிட்டு 926 காவல் பணியாளர்களுக்கு
விருதுகள் வழங்கப்பட்டன. குறிப்பிடத்தக்க மகத்தான வீரச்செயல் காவல் பதக்கங்கள் 215 காவல்துறைப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டன. மிகவும் குறிப்பிடத்தக்கப் புகழ்பெற்ற சேவைக்கான குடியரசுத்தலைவர் காவல் பதக்கங்கள் 80 காவல் பணியாளர்களுக்கும், சிறப்பான சேவைக்கான காவல் விருதுகள் 631 காவல் பணியாளர்களுக்கும் வழங்கப்பட்டன.

குறிப்பிடத்தக்க மகத்தான வீரச் செயல் காவல் பதக்கங்கள் 215ல் ஜம்மு மற்றும் காஷ்மீர் பகுதியில் மகத்தான பணிஆற்றிய 123 பேருக்கும், இடதுசாரி பயங்கரவாதம் பாதித்த பகுதிகளில் மகத்தான பணியாற்றிய 29 பேருக்கும், வடகிழக்குப்பகுதியில் மகத்தான பணியாற்றிய 8 பேருக்கும் வழங்கப்பட்டன. மகத்தான வீரச்செயல் காவல் பதக்கங்கள் பெற்றவர்களில் 55 பேர் மத்திய ரிசர்வ் காவல் படையைச் சேர்ந்தவர்கள், 81 பேர் ஜூம்மு காஷ்மீர் காவல் படையைச் சேர்ந்தவர்கள், 23 பேர் உத்தரப்பிரதேசத்தையும் 16
பேர் தில்லி காவல்துறையையும், 14 பேர் மஹாராஷ்ட்ராவையும் 12 பேர் ஜார்கண்டையும் சேர்ந்தவர்கள். இதர நபர்கள் இதர மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் மற்றும் மத்திய ஆயுதக்காவல் படைகளைச் சேர்ந்ததவர்கள்.

*****(Release ID: 1645770) Visitor Counter : 30