பிரதமர் அலுவலகம்

விஜயவாடாவில் உள்ள கோவிட் மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிர் இழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல்

प्रविष्टि तिथि: 09 AUG 2020 10:14AM by PIB Chennai

விஜயவாடாவில் உள்ள கோவிட் மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிர் இழந்தவர்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

பிரதமர் தனது டுவிட்டரில்,

“விஜயவாடாவில் உள்ள கோவிட் மையத்தில் ஏற்பட்ட தீ விபத்து வருத்தம் அளிக்கிறது. இந்த விபத்தில் தங்களின் அன்பானவர்களை இழந்தவர்களுக்கு எனது இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய எனது பிரார்த்தனைகள். தற்போதுள்ள நிலைமையை ஆந்திர முதல்வர் @ysjagan Ji உடன் விவாதித்தேன். தேவையான அனைத்து உதவிகளையும் அளிப்பேன் என்று உறுதியளித்துள்ளேன்.”, என்று கூறியுள்ளார்.


(रिलीज़ आईडी: 1644555) आगंतुक पटल : 261
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Manipuri , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam