சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

இந்தியா இரண்டு கோடிக்கு மேற்பட்ட கொவிட்-19 சோதனைகளை நடத்தி ஒரு மைல்கல்லை கடக்கிறது

சோதனைகளின் எண்ணிக்கை 10 லட்சம் பேருக்கு 14,640 ஆக அதிகரிக்கிறது

Posted On: 03 AUG 2020 2:13PM by PIB Chennai

இந்தியா இதுவரை 2,02,02,858 கொவிட்-19 மாதிரிகளை பரிசோதனை செய்துள்ளது. இது ஒரு மைல்கல் சாதனை !  மத்திய அரசு மற்றும் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் கூட்டான மற்றும் தீவிரமான முயற்சிகளின் பலனாக, கொவிட்-19 நோய்த்தொற்று பாதிப்பை விரைவில் கண்டறிந்து, தனிமைப்படுத்துவதை உறுதிப்படுத்தும் வகையில்  நாடு முழுவதும் பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளனஐசிஎம்ஆர், பரிசோதனை உத்திகளை வகுத்து, இந்தியா முழுவதும் சோதனை கட்டமைப்பை விரிவுபடுத்தியுள்ளது. இந்த அணுகுமுறையை திறம்பட செயல்படுத்தி நாடு முழுவதும் அதிக  பரிசோதனைகளை செய்யவும் மற்றும் மக்களிடையே பரவலான கொவிட் சோதனைகளை செய்யவும்  வழி வகை செய்தது.

 

கடந்த 24 மணி நேரத்தில், 3,81,027 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன,  சோதனைகளின் எண்ணிக்கை 10 லட்சம் பேருக்கு 14,640 ஆக அதிகரித்துள்ளது.  இதனால்  பத்து லட்சம் பேருக்கு சோதனைகளின் எண்ணிக்கை 14640 ஆகும். 24 மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் நாட்டின் சராசரி அளவைவிட அதிகமான சோதனைகளை செய்துள்ளன.

 

 

நாட்டின் பரிசோதனைக் கூடங்களின் கட்டமைப்பு, தொடர்ந்து வலுப்படுத்தப்பட்டு  தற்போது 1348 ஆய்வகங்களாக உள்ளது; அரசு துறையில் 914 ஆய்வகங்களும், தனியார் துறையில் 434 ஆய்வகங்களும் இயங்கி வருகின்றன.  அவற்றின் விவரம் பின்வருமாறு;

 

  • ரியல் –டைம் ஆர்டி பிசிஆர் அடிப்படையிலான ஆய்வகங்கள்; 686    (அரசு-418 + தனியார்-268)

 

  • ட்ரூநேட் அடிப்படையிலான ஆய்வகங்கள்; 556 (அரசு-465 + தனியார்-91)

 

  • சிபிநேட் அடிப்படையிலான ஆய்வகங்கள் ; 106 (அரசு-31+ தனியார்-75)

 

கோவிட்-19 குறித்த அதிகாரப்பூர்வமான தகவல்களையும், கோவிட்-19 தொடர்பான  தொழில்நுட்ப ரீதியிலான விஷயங்கள், வழிகாட்டுதல்கள், அறிவுறுத்தல்கள் பற்றிய புதிய தகவல்களைத் தெரிந்து கொள்ள தயவுசெய்து இந்த இணையதளத்தைப் பாருங்கள்: https://www.mohfw.gov.in/ மற்றும் @MoHFW_INDIA.(Release ID: 1643190) Visitor Counter : 10