சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
அதிகரிக்கப்பட்டுள்ள ஆய்வகக் கட்டமைப்பால் உந்தப்பட்டுள்ள “சோதனை, தடமறிதல், சிகிச்சை அளித்தல்” உத்தி – 1.5 கோடிக்கும் அதிகமான கொவிட்-19 மாதிரிகள் பரிசோதனை
Posted On:
24 JUL 2020 3:22PM by PIB Chennai
இதுவரை ஒன்றரை கோடிக்கும் அதிகமான (1,54,28,170) கொவிட்-19 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3,52,801 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.
இதனால் இந்தியாவில் 10 லட்சத்திற்கு, 11,179.83 சோதனைகள் என்ற விகிதத்தில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆய்வகங்களின் எண்ணிக்கை (இதுவரை 1290) தொடர்ந்து அதிகரித்து வருவதால், இது சாத்தியப்பட்டுள்ளது.
நமது நாட்டில் 897 அரசுத் துறை ஆய்வகங்களும், 393 தனியார் ஆய்வகங்களும் உள்ளன.
விவரங்கள் பின்வருமாறு :
· உடனடி RT PCR அடிப்படையிலான பரிசோதனை ஆய்வகங்கள் : 653 (அரசு: 399 + தனியார்: 254)
· TrueNat அடிப்படையிலான பரிசோதனை ஆய்வகங்கள் : 530 (அரசு: 466 + தனியார்: 64)
· CBNAAT அடிப்படையிலான பரிசோதனை ஆய்வகங்கள் : 107 (அரசு: 32 + தனியார்: 75)
கொவிட்-19 குறித்த அதிகாரப்பூர்வமான தகவல்களையும், கொவிட்-19 தொடர்பான தொழில்நுட்ப ரீதியிலான விஷயங்கள், வழிகாட்டுதல்கள், அறிவுறுத்தல்கள் பற்றிய புதிய தகவல்களைத் தெரிந்து கொள்ள தயவுசெய்து இந்த இணையதளத்தைப் பாருங்கள்: https://www.mohfw.gov.in/ மற்றும் @MoHFW_INDIA.
****
(Release ID: 1640929)
Visitor Counter : 182
Read this release in:
Marathi
,
Assamese
,
Malayalam
,
English
,
Urdu
,
Hindi
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu