சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்

ஹைட்ரஜன் சேர்க்கப்பட்ட இயற்கை எரிவாயுவை வாகன எரிபொருளாகப் பயன்படுத்துவது தொடர்பாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் பொதுமக்களிடம் கருத்துக் கேட்பு

प्रविष्टि तिथि: 23 JUL 2020 9:45AM by PIB Chennai

ஹைட்ரஜன் சேர்க்கப்பட்ட இயற்கை எரிவாயுவை (சிஎன்ஜி) வாகன எரிபொருளாகப் பயன்படுத்துவது தொடர்பான 2020 ஜூலை 22-ந் தேதியிட்ட ஜிஎஸ்ஆர் 461(இ) அறிவிக்கை வாயிலாக, மத்திய மோட்டார் வாகன விதிமுறைகள் 1979-ல் திருத்தம் செய்வது குறித்து, மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் பொதுமக்களிடமும் மற்றும் சம்பந்தப்பட்ட துறையினரிடமும் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் கேட்டுள்ளது.

இது நமது நாட்டில், சுற்றுச்சூழலுக்கு ஏற்ற எரிபொருளை வாகனங்களுக்குப் பயன்படுத்துவதற்காக அமைச்சகம் எடுத்துள்ள மற்றொரு நடவடிக்கையாகும்.

இது தொடர்பான தமது கருத்துக்களை, பொதுமக்கள் 30 நாட்களுக்குள், இணைச் செயலர், மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம், போக்குவரத்து வளாகம், நாடாளுமன்றத் தெரு, புதுதில்லி 110001 (மின்னஞ்சல் - jspb-morth[at]gov[dot]in) என்ற முகவரிக்கு அனுப்பலாம்.

*****


(रिलीज़ आईडी: 1640580) आगंतुक पटल : 199
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Bengali , Punjabi , Odia , Telugu , Malayalam