பிரதமர் அலுவலகம்
காக்ராபர் அணு மின் நிலையத்தின் 3-வது அணு உலையில் மின் உற்பத்தி துவக்கப்பட்டதற்கு, இந்திய அணு விஞ்ஞானிகளுக்கு பிரதமர் வாழ்த்து
இடுகை இடப்பட்ட நாள்:
22 JUL 2020 10:44AM by PIB Chennai
காக்ராபர் அணு மின் நிலையத்தின் 3-வது அணு உலையில் அணு மின் உற்பத்தி துவக்கப்பட்டதற்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி இந்திய அணு விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் பகிர்ந்துள்ள டுவிட்டர் பதிவில், “காக்ராபர் அணு மின் நிலையத்தின் 3-வது அணு உலையில், அணு மின் உற்பத்தி துவக்கப்பட்டதற்கு இந்திய அணு விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துகள்! உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட 700 மெகா வாட் காக்ராபர் அணு மின் நிலையத்தின் 3-வது அணு உலையானது, இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின் ஔிரும் உதாரணமாகத் திகழ்கிறது. இது, வருங்காலத்தில் இது போன்ற பல சாதனைகள் நிகழ்த்துவதற்கு ஒரு வழிகாட்டுதலாக விளங்கும்” என்று கூறியுள்ளார்.
*****
(வெளியீட்டு அடையாள எண்: 1640345)
வருகையாளர் எண்ணிக்கை : 289
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam