சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 7.2 லட்சத்தைத் தாண்டியது

Posted On: 21 JUL 2020 7:41PM by PIB Chennai

கோவிட் 19 நோய்க்கு சிறப்பான மருத்துவ சிகிச்சை அளிப்பதை உறுதி செய்வதற்கு, நாடு தழுவிய ஆய்வக வசதிகள் விரிவாக்கத்தின் மூலம் மருத்துவப் பரிசோதனைகள் செய்தல் மற்றும் தரநிலைப்படுத்திய சிகிச்சை நடைமுறைகள், சிறந்த கண்காணிப்புக்குத் தொடர்ச்சியான, ஆக்கபூர்வமான, முன்னேற்றகரமான மற்றும் ஆதாரங்கள் அடிப்படையிலான உத்திகள் மேற்கொண்ட காரணத்தால், கடந்த 24 மணி நேரத்தில் குணம் அடைந்த கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை 24,491 ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து, இதுவரையில் குணம் அடைந்த கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை 7,24,577 ஆக உயர்ந்துள்ளது.

குணம் அடைபவர்களின் அளவு 62.72 சதவீதமாக அதிகரித்துள்ளது.

தொற்று நோயால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை 2.43 சதவீதம் என்ற நிலையில், தொடர்ந்து இறங்குமுகத்தில் இருக்கிறது.

குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை மற்றும் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கைக்கு இடையிலான இடைவெளி இப்போது 3,22,048 ஆக உள்ளது. இப்போது 4,02,529  பேர்  சிகிச்சை பெற்று வருகிறார்கள். அனைவரும் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.

Combined Final 21st July Press Brief.jpg

 

 

கடந்த 24 மணி நேரத்தில் 3,33,395  மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக நாட்டில் இதுவரையில் 1,43,81,303  மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. மருத்துவப் பரிசோதனை ஆய்வகங்களின் எண்ணிக்கையை 1274 ஆக உயர்த்தியதால் இந்த சாதனை எட்டப்பட்டுள்ளது. இதில் 892 அரசு ஆய்வகங்களும், 382 தனியார் ஆய்வகங்களும் உள்ளன. அதில் பின்வரும் வகைகள் அடங்கும்:

 

• Real-Time RT PCR அடிப்படையிலான ஆய்வகங்கள் : 651 (அரசு : 398 + தனியார் : 253)

TrueNat அடிப்படையிலான ஆய்வகங்கள் : 516 (அரசு : 457 + தனியார் : 59)

CBNAAT அடிப்படையிலான ஆய்வகங்கள் : 107 (அரசு : 37 + தனியார் : 70)

 


(Release ID: 1640273) Visitor Counter : 263