உள்துறை அமைச்சகம்
மத்தியப் பிரதேச ஆளுனர் திரு.லால்ஜி தண்டன் மறைவிற்கு மத்திய உள்துறை அமைச்சர் திரு.அமித் ஷா வேதனை தெரிவித்தார்
प्रविष्टि तिथि:
21 JUL 2020 12:08PM by PIB Chennai
மத்தியப் பிரதேச ஆளுனர் திரு.லால்ஜி தண்டன் மறைவிற்கு மத்திய உள்துறை அமைச்சர் திரு.அமித் ஷா ஆழ்ந்த வேதனை தெரிவித்துள்ளார். அவர் பகிர்ந்துள்ள டுவிட்டர் பதிவில், திரு.லால்ஜி தண்டன் தமது ஒட்டுமொத்த வாழ்வையும் பொதுச் சேவைக்காக அர்ப்பணித்தவர் என்று கூறியுள்ளார்.
பொதுச் சேவை பணியாளராக திரு.லால்ஜி தண்டன், இந்திய அரசியலில் ஆழமான தடத்தை பதித்துச் சென்றுள்ளார் என்றும், அவரது மறைவு நாட்டிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு என்றும் திரு. அமித் ஷா மேலும் தெரிவித்துள்ளார்.
திரு.தண்டனின் ஆன்மா சாந்தியடைவதற்கு இறைவனை வேண்டுவதாகவும், அன்னாரை இழந்து வாடும் அவரின் குடும்பத்தினருக்கு தமது இரங்கல்களைத் தெரிவிப்பதாகவும் மத்திய உள்துறை அமைச்சர் கூறியுள்ளார்.
*****
(रिलीज़ आईडी: 1640162)
आगंतुक पटल : 270
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Telugu
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Malayalam