சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
கடந்த 24 மணி நேரத்தில் 23,600க்கும் மேற்பட்டோர் குணமடைந்தனர்
குணமடைந்தோரின் எண்ணிக்கை நோய்த் தொற்றில் இருப்பவர்களை விட 3 லட்சத்திற்கும் அதிகம்
ஒரு மில்லியனுக்கு இத்தனை சோதனைகள் என்பது (TPM) பத்தாயிரத்தை நெருங்குகிறது
Posted On:
19 JUL 2020 5:56PM by PIB Chennai
மத்திய மற்றும் மாநில / யூனியன் பிரதேச அரசாங்கங்கள் செயல்படுத்திய நடவடிக்கைகள் வலிய மேற்கொண்ட பரிசோதனைகள் மற்றும் சரியான நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் காரணமாக கோவிட் தொற்றுள்ளோரை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய உதவியது. நன்கு செயல்படுத்தப்பட்ட, திறமையான மருத்துவ மேலாண்மை, தரமான கவனிப்பு நெறிமுறையின் மூலம் மிதமான மற்றும் கடுமையான நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட கோவிட் நோயாளிகளிடையே அதிக மீட்பு விகிதத்தை உறுதி செய்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 23,672 கோவிட் நோயாளிகள் குணமடைந்துள்ளனர். கோவிட்-19 நோயால் குணமடைந்தவர்களுக்கும், நோயாளிகளுக்கும் இடையிலான இடைவெளி மேலும் அதிகரித்து 3,04,043 ஆக உள்ளது. நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 6,77,422 ஆகும். மீட்பு விகிதம் இப்போது 62.86 சதவீதமாக ஆக உள்ளது.
மருத்துவமனைகள் மற்றும் வீட்டுத் தனிமைப்படுத்தல்களில் 3,73,379 உள்ள நிலையில், அனைத்து நோயாளிகளுக்கும் மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது.
நாட்டின் பரிசோதனை உள்கட்டமைப்பு கணிசமாக அதிகரித்துள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் (ICMR) பரிந்துரைத்த சோதனை உத்தி பதிவு செய்யப்பட்ட அனைத்து மருத்துவப் பயிற்சியாளர்களையும் பரிசோதனைக்கு பரிந்துரைக்க அனுமதிக்கிறது. ரேபிட் ஆன்டிஜென் பாயிண்ட் ஆஃப் கேர் (ஓOC) சோதனை மற்றும் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களால் பரவலான Gold - standard RT –PCR அடிப்படையிலான சோதனைக்கு வழிவகுத்ததுடன், சோதனை செய்யப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 3,58,127 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன. மொத்தம் 1,37,91,869 மாதிரிகள் இந்தியாவுக்கான சோதனை ஒரு மில்லியனுக்கு (TPM) 9994.1 என்ற எண்ணிக்கையை எட்டியுள்ளது.
தொடர்ந்து விரிவாக்கும் கண்டறியும் ஆய்வக வலையமைப்பு 1262 ஆய்வகங்களை உள்ளடக்கியது, இதில் அரசுத்துறையில் 889 ஆய்வகங்கள் மற்றும் 373 தனியார் ஆய்வகங்கள் உள்ளன. இவை பின்வருமாறு:
- Real - Time RT - PCR அடிப்படையிலான சோதனை ஆய்வகங்கள்: 648 (அரசு: 397 + தனியார்: 251)
- TrueNat அடிப்படையிலான சோதனை ஆய்வகங்கள்: 510 (அரசு: 455 + தனியார்: 55)
- CBNAD அடிப்படையிலான சோதனை ஆய்வகங்கள்: 104 (அரசு: 37 + தனியார்: 67)
கோவிட்-19 தொடர்பான தொழில்நுட்பச் சிக்கல்கள், வழிகாட்டுதல்கள் மற்றும் ஆலோசனைகள் குறித்த உண்மையான மற்றும் புதுப்பிக்கப்பட்ட அனைத்துத் தகவல்களுக்கும் தயவுசெய்து பின்வரும் சமூக வலைத்தளங்களை தவறாமல் பார்வையிடவும் https://www.mohfw.gov.in/ மற்றும் @MoHFW_INDIA
கோவிட்-19 தொடர்பான தொழில்நுட்ப வினவல்கள் technicalquery.covid19[at]gov[dot]in மற்றும் பிற கேள்விகளை ncov2019[at]gov[dot]in மற்றும் @CovidIndiaSeva இல் அனுப்பலாம்.
கோவிட் - 19 தொடர்பாக ஏதேனும் கேள்விகள் இருந்தால், தயவுசெய்து சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் உதவி எண்: + 91-11-23978046 அல்லது 1075 (கட்டணமில்லா). என்ற எண்களைத் தொடர்பு கொள்ளவும், கோவிட் இல் உள்ள மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் உதவி எண்களின் பட்டியலும் https://www.mohfw.gov.in/pdf/coronvavirushelplinenumber.pdf. என்ற இணைய தளத்தில் கிடைக்கிறது.
****
(Release ID: 1639823)
Visitor Counter : 273
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam