ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்

பி.பி.இ. உடைகளைப் பரிசோதனை செய்து சான்றளிக்க சிப்பெட் நிறுவனத்திற்கு என்.ஏ.பி.எல். அங்கீகாரம்


இந்த சாதனைக்காக சிப்பெட் நிறுவனத்துக்கு திரு. கௌடா பாராட்டு.

Posted On: 19 JUL 2020 3:10PM by PIB Chennai

ரசாயனங்கள் மற்றும் உரங்கள் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ரசாயனங்கள், பெட்ரோகெமிக்கல்ஸ் துறையின் கீழ் உள்ள மத்திய பெட்ரோகெமிக்கல்ஸ் பொறியியல், தொழில்நுட்பக் கல்வி நிலையம் (சிப்பெட் - CIPET) என்ற உயர்நிலை நிறுவனம், முழு உடல் பரிசோதனைக்கான பி.பி.இ. உடைகளைப் பரிசோதனை செய்து சான்றளிப்பதற்கு,  தேசிய தரச் சான்று அமைப்பு (National Accreditation Board for Testing and Calibration Laboratories - NABL) அமைப்பு அங்கீகாரம் அளித்துள்ளது.

https://static.pib.gov.in/WriteReadData/userfiles/image/IMG-20200718-WA0077Z41F.jpg

 

 

பி.பி.இ. உடைத் தொகுப்பில் சர்வதேசத் தரத்திலான கையுறைகள், முழு உடல் கவச உடை, முகக்கவச  உறை, கண்களை மூடும் கண்ணாடிகள், மூன்றடுக்கு மருத்துவ முகக்கவச உறைகள் உள்ளிட்டவை இருக்கும். கோவிட்-19 நோய்க்கு எதிரான போராட்டத்தில் சிப்பெட் நிறுவனத்தின் மற்றும் ஒரு சாதனையாக இது அமைந்துள்ளது. தற்சார்பு இந்தியா முயற்சியில் ஒரு முன்னேற்றமாகவும் கருதப்படுகிறது.

சிப்பெட் : புவனேஸ்வரில் உள்ள ஐ.பி.டி. மையம் பி.பி.இ. உடை பரிசோதனைக்கான வசதியை உருவாக்கி, தங்களுக்கு அங்கீகாரம் அளிக்கக் கோரி என்.ஏ.பி.எல்.லுக்கு விண்ணப்பம் செய்திருந்தது. அங்குள்ள பரிசோதனை வசதிகளை ஆன்லைன் மூலம் தணிக்கை செய்தபிறகு, புவனேஸ்வர் சிப்பெட் மையத்திற்கு, இதற்கான அங்கீகாரத்தை என்.ஏ.பி.எல். அளித்துள்ளது. மற்ற சிப்பெட் மையங்களுக்கும் இதற்காக விண்ணப்பித்துள்ளன. அவை பரிசீலனையில் உள்ளன.

இந்தச் சாதனையை எட்டியிருப்பதற்காக புவனேஸ்வரம் சிப்பெட் மையத்திற்கு மத்திய ரசாயனங்கள் மற்றும் உரங்கள் துறை அமைச்சர் திரு. டி.வி. சதானந்த கௌடா பாராட்டு தெரிவித்துள்ளார். நாட்டு மக்களுக்கு சேவை செய்யும் பணிகளுக்கு உத்வேகம் அளிப்பதுடன், மேக் இன் இந்தியா திட்டத்தில் கவனம் செலுத்த குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு உதவிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

உலக சுகாதார நிறுவனம் மற்றும் ISO வழிகாட்டுதல்களின்படி சுகாதார சேவைத் துறையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகளில் சிப்பெட் நிறுவனம் முன்முயற்சிகளை எடுத்து வருகிறது. கோவிட் நோய்த் தொற்று காலத்தில் அத்தியாவசியப் பொருள்கள் வழங்கல் சேவைக்கு உதவும் வகையில் உணவு தானியம் மற்றும் உரம் பேக்கேஜிங் செய்வதில் பரிசோதனைத் திறன்களையும் சிப்பெட் உருவாக்கிக் கொண்டுள்ளது.



(Release ID: 1639803) Visitor Counter : 245