சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
கொவிட்-19 : 6.1 லட்சத்திற்கும் அதிகமான தொற்றாளர்கள் குணமடைந்துள்ளனர்
प्रविष्टि तिथि:
16 JUL 2020 2:06PM by PIB Chennai
கொவிட்-19 தடுப்பு, கட்டுப்படுத்துதல் மற்றும் நிர்வகிப்பதற்காக, மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுடன் இணைந்து ‘ஒட்டு மொத்த அரசும்’ செயல்படுவது என்ற உத்தியை மத்திய அரசு பின்பற்றுகிறது. கூட்டு முயற்சிகள், தொடர்ந்து மதிப்பாய்வு செய்யப்பட்டு மிக உயர்ந்த மட்டத்தில் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
தொற்று பாதிப்புகளைக் குறைப்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இன்றைய நிலவரப்படி, நம் நாட்டில் கொவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை 3,31,146 மட்டுமே. இது இதுவரை கண்டறியப்பட்ட மொத்த தொற்றுப் பாதிப்புகளில் மூன்றில் ஒரு பங்கு (34.18%) ஐ விட சற்று அதிகமாக உள்ளது.
நாள்தோறும் வீடு வீடாக சென்று தொற்று குறித்து கணக்கெடுப்பது உள்ளிட்ட கட்டுப்பாட்டு நடவடிக்கைகளால் கொவிட்-19 பாதிப்பு குறைக்கப்பட்டுள்ளதோடு, தொடர்ந்து அதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவும் இவை உதவின.
இந்த ஆண்டு ஜூன் மாதத்தின் 3-வது வாரத்திலிருந்து குணமடைவோர் விகிதம் 50 விழுக்காட்டை கடந்துள்ளது. குணமடையும் நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பதோடு, தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. கொவிட்-19 நோயாளிகளில் 63.25 சதவீதத்தினர் இதுவரை குணமடைந்துள்ளனர்.
****
(रिलीज़ आईडी: 1639080)
आगंतुक पटल : 259