பிரதமர் அலுவலகம்
ஆச்சார்யா ஸ்ரீ புருஷோத்தம் பிரியதாஸ்ஜி சுவாமிஸ்ரீ மகராஜ் மறைவுக்கு பிரதமர் இரங்கல்
प्रविष्टि तिथि:
16 JUL 2020 10:51AM by PIB Chennai
ஆச்சார்யா ஸ்ரீ புருஷோத்தம் பிரியதாஸ்ஜி சுவாமிஸ்ரீ மகராஜ் மறைவுக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் பகிர்ந்துள்ள டுவிட்டர் பதிவில், “ஆச்சார்யா ஸ்ரீ புருஷோத்தம் பிரியதாஸ்ஜி சுவாமிஸ்ரீ மகராஜ் அவர்களை, சமுதாயத்திற்கு செய்துள்ள உன்னதப் பணிக்காக என்றும் நினைவுகூர்வோம். மனிதர்களின் துயரங்களை நீக்கி, பரிவை உண்டாக்க அவர் அயராது பாடுபட்டார். இந்தியாவில் மட்டுமல்ல, உலகில் உள்ள எண்ணற்ற மக்களால் அவர் நினைவுகூரப்படுவார்.
ஆச்சார்யா ஸ்ரீ புருஷோத்தம் பிரியதாஸ்ஜி சுவாமிஸ்ரீ மகராஜ், அளப்பரிய அறிவாற்றல் கொண்டவர். சமூகப் பணி, கல்வி மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் ஆகியவற்றை வலியுறுத்தியதற்காக அவர் என்றும் நினைவுகூரப்படுவார். அவருடனான எனது கலந்துரையாடல்கள் பலவற்றை என்னால் என்றும் மறக்க இயலாது. ஓம் சாந்தி” என்று பிரதமர் கூறியுள்ளார்.
*****
(रिलीज़ आईडी: 1639003)
आगंतुक पटल : 250
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam