பிரதமர் அலுவலகம்

750 மெகாவாட் சூரிய மின்சக்தித் திட்டத்தை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்

ஆண்டொன்றுக்கு சுமார் 15 லட்சம் டன் கரியமில வாயுவிற்கு இணையான கார்பன் வெளியீட்டை ரேவா திட்டம் குறைக்கும்
2022ஆம் ஆண்டுக்குள் 175 ஜிகாவாட் திறன் கொண்ட புதுப்பிக்கக்கூடிய எரிசக்தித் திறனை இந்தியாவில் ஏற்படுத்துவதற்கான, இந்தியாவின் உறுதிப்பாட்டை இத்திட்டம் வெளிப்படுத்துகிறது

Posted On: 09 JUL 2020 4:11PM by PIB Chennai

10 ஜூலை 2020 அன்று மத்தியப்பிரதேசத்தில் ரேவாவில் அமைக்கப்பட்டுள்ள 750 மெகாவாட் திறன் கொண்ட சூரிய மின்சக்தித் திட்டத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

 

மொத்தம் 1500 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட சூரிய எரிசக்தி பூங்காவினுள், 500 ஹெக்டேர் பரப்பளவில் ஒவ்வொன்றும் 250 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட, மூன்று சூரிய மின்சக்தி அமைப்புகள் இத்திட்டத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த சூரிய சக்திப் பூங்கா, மத்தியப்பிரதேசத்தின் (Urja Vikas Nigam Limited - MPUVN)) உர்ஜா விகாஸ் நிகாம் லிமிடெட் மற்றும் மத்தியப் பொதுத்துறை நிறுவனமான சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆப் இந்தியா (Solar Energy Corporation of India - SECI) ஆகியவை இணைந்து உருவாக்கிய கூட்டு நிறுவனமான ரேவா அல்ட்ரா மெகா சோலார் லிமிடெட் (RUMSL) என்ற நிறுவனத்தால் ஏற்படுத்தப்பட்டது. இந்தக் கூட்டு நிறுவனத்துக்கு பூங்காவை அமைப்பதற்காக மத்திய நிதி உதவி 138 கோடி ரூபாய் அளிக்கப்பட்டது. சூரிய சக்திப் பூங்கா உருவாக்கப்பட்ட பிறகு பூங்காவிற்குள், ஒவ்வொன்றும் 250 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட மூன்று உற்பத்தி அமைப்புகளை ஏற்படுத்துவதற்காக தலை கீழ் ஏல முறையில்  (Reverse Auction) மூன்று நிறுவனங்களை மஹீந்திரா ரென்யூவபிள் பிரைவேட் லிமிடெட், (Mahindra Renewables Private Ltd)., ஏ சி எம் இ ஜெய்பூர் சூரிய சோலார் பவர் பிரைவேட் லிமிடெட், (ACME Jaipur Solar Power Private Ltd)., அரின்சன் க்லீன் எனெர்ஜி பிரைவேட் லிமிடெட் (Arinsun Clean Energy Private Ltd) ஆகியவற்றை RUMSL தேர்ந்தெடுத்தது. மத்திய மாநில அரசுகளுக்கிடையே சுமுகமான ஒருங்கிணைப்பு இருந்தால், மிகச் சிறந்த பலன்களை அடைய முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக ரேவா சூரியசக்தி திட்டம் விளங்குகிறது.

 

கிரிட் பேரிட்டி (grid parity) தடையை உடைத்து நாட்டில் முதல் முதலாக செயல்படுத்தப்பட்ட சூரிய சக்தித் திட்டம், ரேவா சூரிய சக்தித் திட்டமாகும். 2017ஆம் ஆண்டின் துவக்க காலத்தில் ஒரு யூனிட்டுக்கு 4.50 ரூபாயாக இருந்த சூரிய சக்தித் திட்டக் கட்டணங்களுடன் ஒப்பிடுகையில், ரேவா திட்டம் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த பலன்களை அடைந்துள்ளது. முதலாம் ஆண்டு கட்டணம் ஒரு யூனிட் ரூ.2.97 என்றும், 15 ஆண்டுகளில் ஒரு யூனிட்டுக்கு ரூ.0.05 கட்டண உயர்வு, இருபத்தைந்து ஆண்டுகளில் சமநிலைப்படுத்தப்பட்ட விகிதமான ஒரு யூனிட்டுக்கு ரூ.3.30 என்பதாக இருக்கும். இந்தத் திட்டம் ஆண்டொன்றுக்கு சுமார் 15 லட்சம் டன் கரியமில வாயுவிற்கு இணையான கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்கும்.

 

ரேவா திட்டத்தின் வலுவான திட்டக் கட்டமைப்பு, புதுமை ஆகியவை இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் அங்கீகாரம் பெற்றுள்ள, மின்சாரத் தயாரிப்பாளர்கள் கட்டணம் பெறுவதில் உள்ள அபாயங்களைக் குறைக்கும் வகையிலான, பாதுகாப்பான முறையில் கட்டணம் பெறும் முறையை , புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தால் (Ministry of New and Renewable Energy - MNRE) மற்ற மாநிலங்களுக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. புதுமை மற்றும் திட்டச் சிறப்பு ஆகியவற்றுக்காக உலக வங்கி குழுமத் தலைவரின் விருதை இத்திட்டம் பெற்றுள்ளது. பிரதமரின் நூலான புதுமைக்கு ஒரு புத்தகம் - புதிய தொடக்கங்கள் என்ற நூலிலும் இது இடம்பெற்றுள்ளது. மாநிலத்திற்கு வெளியே உள்ள அமைப்பு ரீதியான, வாடிக்கையாளருக்கும் மின்சக்தியை வழங்கக்கூடிய, முதன் முதலான, புதுப்பிக்கக்கூடிய, எரிசக்தித் திட்டமாகவும் இத்திட்டம் உள்ளது. இந்தத் திட்டத்திலிருந்து கிடைக்கும் எரிசக்தியிலிருந்து 24 சதவிகிதம் டெல்லி மெட்ரோவிற்கு வழங்கப்படும். மீதமுள்ள 76 சதவிகிதம், மத்தியப் பிரதேசத்திலுள்ள மாநில மின்பகிர்வு நிறுவனங்களுக்கு வழங்கப்படும். 2022-ஆம் ஆண்டுக்குள் 100 ஜிகாவாட் சூரிய சக்தித்திறன் கொண்ட அமைப்புகளை ஏற்படுத்துவது உட்பட 2022ஆம் ஆண்டுக்குள் 175 ஜிகாவாட் திறன் கொண்ட புதுப்பிக்கக்கூடிய எரிசக்தித்திறனை இந்தியாவில் ஏற்படுத்துவதற்கான, இந்தியாவின் உறுதிப்பாட்டை ரேவா திட்டம் வெளிப்படுத்துகிறது

 

***



(Release ID: 1637679) Visitor Counter : 451