பிரதமர் அலுவலகம்

நாளை, இந்தியா உலக வாரம் 2020 மாநாட்டில் துவக்க உரையாற்றுகிறார் பிரதமர் திரு.நரேந்திர மோடி

முப்பதுக்கும் அதிகமான நாடுகளிலிருந்து 5000 பேர் பங்கேற்கும் நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றுகிறார்

Posted On: 08 JUL 2020 5:40PM by PIB Chennai

நடைபெறவுள்ள இந்தியா உலக வாரம் 2020 மாநாட்டின் முதல் நாளன்று பிரதமர் திரு நரேந்திரமோடி துவக்க உரையாற்றுகிறார். “இந்தியாவும் சிறந்த புதிய உலகமும் மறுமலர்ச்சியாய் இரு” என்ற தலைப்பிலான மூன்று நாள் மெய்நிகர் மாநாடு நடைபெற உள்ளது இதில் 30க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 5,000 பேர் கலந்து கொள்வார்கள். உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் எழுபத்தைந்து தொடர்களில் 250 நிபுணர்கள் உரையாற்றுவார்கள்.

இந்த நிகழ்ச்சியில் மத்திய வெளியுறவு விவகாரத் துறை அமைச்சர் டாக்டர் எஸ் ஜெய்சங்கர், மத்திய ரெயில்வே, வர்த்தகம் தொழில்துறை அமைச்சர் திரு பியூஸ் கோயல், ஜம்மு காஷ்மீர் லெப்டினன்ட் ஜெனரல் ஜி சி முர்மு, ஈஷா அமைப்பின் நிறுவனர் சத்குரு, ஆன்மீகத் தலைவர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், யுனைட்டட் கிங்டம் வெளியுறவுச் செயலர் டாமினிக் ராப், உள்துறை செயலர் திருமிகு ப்ரீத்தி பட்டேல், இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் திரு கென் ஜஸ்டர்  மற்றும் பலர் உரையாற்றுவார்கள்.

சுயசார்பு இந்தியா குறித்த நடன கலைஞர் மது நடராஜ் அவர்களின் நடன நிகழ்ச்சியும் மாநாட்டில் இடம்பெறும். சிதார் கலைஞர் ரவிசங்கரின் நூறாவது பிறந்த ஆண்டையொட்டி அவரது 3 மாணவர்கள் அளிக்கும் சிறப்பு நிகழ்ச்சியும் நடைபெறும்.

******



(Release ID: 1637488) Visitor Counter : 148