மத்திய அமைச்சரவை

மூன்று பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களுக்குப் புதிதாக மூலதனம் வழங்க அரசு ஒப்புதல் - ஓரியண்டல் இன்ஷூரன்ஸ் கம்பெனி லிமிடெட், நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட், யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட்

Posted On: 08 JUL 2020 4:25PM by PIB Chennai

ஓரியண்டல் இன்ஷூரன்ஸ் கம்பெனி லிமிடெட் (OlCL), நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் (NICL), யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட், (UIICL) ஆகிய மூன்று பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களிலும் புதிதாக மூலதனத்தைச் செலுத்த அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. 2019-20ஆம்  நிதியாண்டில் 2500 கோடி ரூபாய் உட்பட மொத்தம் 12 ஆயிரத்து 450 கோடி ரூபாய் மதிப்பில் இம்மூன்று நிறுவனங்களுக்கும் மூலதனம் வழங்கப்படுவதற்கு பிரதமர் திரு.நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. உடனடியாக 3475 கோடி ரூபாய் அளிக்கப்படும். மீதமுள்ள 6475 கோடி ரூபாய் பின்னர் வழங்கப்படும்.. NICL நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட பங்கு மூலதனத்தை 7500 கோடியாக ரூபாயாக அதிகரிக்கவும், UIICL,  OlCL நிறுவங்களின்  பங்கு மூலதனத்தை 5000 கோடி ரூபாயாக அதிகரிக்கவும், அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த நிறுவனங்களை இணைப்பதற்கான முறைகள் தற்போதைய நிலையைக் கருத்தில் கொண்டு, நிறுத்தப்பட்டுவிட்டன. அதற்கு மாறாக, இந்த நிறுவனங்களின் லாபகரமான வளர்ச்சியின் மீது கவனம் செலுத்தப்படும்.

நடப்பு நிதியாண்டில் முதல் கட்டமாக OlCL UIICL  NICL ஆகிய மூன்று பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களுக்கும், 3475 கோடி ரூபாய் மூலதனத் தொகை வழங்கப்படும். மீதித்தொகை ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட கட்டங்களில் வழங்கப்படும். இதைச் செயல்படுத்தும் விதமாக NICL நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட மூலதனம் 7500 கோடி ரூபாயாகவும்,  OlCL, UIICL நிறுவனங்களின் அங்கீகரிக்கப்பட்ட மூலதனம் 5000 கோடி ரூபாயாகவும் அதிகரிக்கப்படும்.

இவ்வாறு மூலதனத்தை அதிகரிப்பதன் மூலமாக இந்த மூன்று பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களின் நிதி நிலைமையும் பணப்புழக்க நிலைமையும் மேம்பட்டு, பொருளாதாரத்தின் காப்பீட்டு தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், மாற்றங்களை உள்வாங்கி, நிதி ஆதாரங்களைத் திரட்டும் திறனை அதிகரிக்கும் வகையில் அமையும். காப்பீட்டுத் துறையில் உள்ள அபாயங்களைத் திறமையாக நிர்வகிப்பதை மேம்படுத்தவும் இது உதவும்.

நடப்பு நிதியாண்டில், இந்த மூன்று பொதுத்துறை நிறுவனங்களுக்கும் 3475 கோடி ரூபாய் உடனடியாக வழங்கப்படும். அதன் பின்னர் அடுத்தகட்டமாக 6475 கோடி ரூபாய் வழங்கப்படும்.

                                   -------



(Release ID: 1637479) Visitor Counter : 220