சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கோவிட் -19 குறித்த அண்மைச் செய்திகள்


4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.

சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையை விட அதிகமாக 1.65
லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.

Posted On: 05 JUL 2020 1:43PM by PIB Chennai

கோவிட்-19 பெருந்தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்தவும், சமாளிக்கவும், மத்திய அரசுமாநில / யூனியன் பிரதேச அரசுகளுடன் இணைந்தும், திட்டமிட்டும் மேற்கொண்டு வரும்  நடவடிக்கைகள் காரணமாககோவிட்-19 பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை, இன்று (5 ஜுலை, 2020) 4,09.082-ஆக அதிகரித்துள்ளது.   கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 14,856 நோயாளிகள் கோவிட்-19 பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர்.  

 

கோவிட்-19 பாதிப்புக்கு தற்போது சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கையை விட 1,64,268க்கும் அதிகமானோர் இதுவரை குணமடைந்துள்ளனர்இதன் மூலம், தேசிய அளவில் கோவிட்-19 பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் சதவீதம்  60.77% ஆக உள்ளது.

 

தற்போது, 2,44,814 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர், இவர்கள் அனைவரும் மருத்துவர்களின் தீவிரக் கண்காணிப்பில் உள்ளனர்.

 

21 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில், குணமடைவோர் எண்ணிக்கை, தேசிய சராசரியை விட அதிகமாக உள்ளதுஅந்தப் பட்டியல் வருமாறு:

 

வ.எண்.

மாநிலம்/யூனியன் பிரதேசம்

குணமடைவோர் வீதம்

1

சண்டிகர்

85.9%

2

லடாக்

82.2%

3

உத்தராகண்ட்

80.9%

4

சட்டிஸ்கர்

80.6%

5

ராஜஸ்தான்

80.1%

6

மிசோரம்

79.3%

7

திரிபுரா

77.7%

8

மத்தியப்பிரதேசம்

76.9%

9

ஜார்கண்ட்

74.3%

10

பிகார்

74.2%

11

ஹரியானா

74.1%

12

குஜராத்

71.9%

13

பஞ்சாப்

70.5%

14

தில்லி

70.2%

15

மேகாலயா

69.4%

16

ஒடிசா

69.0%

17

உத்தரப்பிரதேசம்

68.4%

18

இமாசலப்பிரதேசம்

67.3%

19

மேற்கு வங்கம்

66.7%

20

அஸ்ஸாம்

62.4%

21

ஜம்மு காஷ்மீர்

62.4%

 

 நாடு முழுவதும் பரிசோதனைக் கூடங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறதுஅரசு சார்பில் 786 பரிசோதனைக் கூடங்களும், 314 தனியார் பரிசோதனைக் கூடங்கள் என, நாடு முழுவதும் 1,100-க்கும் மேற்பட்ட பரிசோதனைக் கூடங்கள் செயல்பட்டு வருகின்றனஅதன் விவரம் வருமாறு :

 

•          உடனுக்குடன் பரிசோதிக்கும் ஆர்.டி. பி.சி.ஆர் அடிப்படையிலான பரிசோதனைக் கூடங்கள்:  591 (அரசு: 368 + தனியார்: 223 )

•          உண்மையான இயல்பு அடிப்படையிலான பரிசோதனைக் கூடங்கள் : 417 (அரசு:385+தனியார்:223)

•          சி.பி.நாட் அடிப்படையிலான பரிசோதனைக் கூடங்கள்: 92 (அரசு: 33+தனியார்:59) 

 

திட்டமிட்ட  சோதனை, தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறிதல், சிகிச்சையளித்தல்  உத்தியை, கோவிட்-19 பரிசோதனை மேற்கொள்வதில் இருந்த தடைகளை அகற்ற அண்மையில் மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளுடன் இணைத்தால்தினசரி பரிசோதனை செய்வோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும்கடந்த 24 மணி நேரத்தில் 2,48,934 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை மேற்கொள்ளப்பட்ட மொத்த பரிசோதனைகளின் எண்ணிக்கை 97,89,066 ஆகும்

 

‘பொது மருத்துவம்  மற்றும்  சிறப்பு மனநலச் சேவைதொடர்பாக, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை தகவல்களை வெளியிட்டுள்ளதுஅதன் விவரங்களை அறிந்துகொள்ள:

 

https://www.mohfw.gov.in/pdf/MentalHealthIssuesCOVID19NIMHANS.pdf

                                                         

 

*****


(Release ID: 1636630) Visitor Counter : 225