சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கொவிட்-19 குறித்த அண்மைச் செய்திகள்

சிகிச்சை பெறுபவர்களை விட குணமடைந்தோர் எண்ணிக்கை சுமார் 1.6 லட்சம் அதிகம்

குணமடைந்தோர் விகிதம் 60.81 சதவீதம்

95 லட்சத்துக்கும் அதிகமான மாதிரிகள் சோதனை

Posted On: 04 JUL 2020 5:10PM by PIB Chennai

கோவிட்-19 நோயிலிருந்து குணமடைபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுடன் இணைந்து மத்திய அரசு மேற்கொண்டு வரும் கோவிட்-19 தடுப்பு, கட்டுப்பாடு மற்றும் மேலாண்மை ஆகிய ஒருங்கிணைந்த நடவடிக்கையால், இன்று வரை, 1,58,793 பேர், கோவிட்-19 நோய்க்கு சிகிச்சை பெற்று வருபவர்களை விட அதிகமாக குணமடைந்துள்ளனர். இதன் பயனாக, குணமடைந்தோர் விகிதம் 60.81 சதவீதமாக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில், மொத்தம் 14,335 கோவிட்-19 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். இதையும் சேர்த்து மொத்தம் 3,94,226 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர்.

தற்போது, 2,35,433 பேர் பாதிக்கப்பட்டு , சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் மருத்துவக் கண்காணிப்பில் இருந்து வருகின்றனர்.

நாட்டில் சோதனைக்கூடக் கட்டமைப்பை விரிவுபடுத்தும் முயற்சியே, நாளுக்கு நாள் எண்ணிக்கை அதிகரிக்கக் காரணமாகும். நாட்டில் தற்போது, 780 அரசு ஆய்வகங்கள், 307 தனியார் சோதனைக்கூடங்கள் உள்பட, 1087 சோதனைக்கூடங்கள் இயங்கி வருகின்றன. அவை வருமாறு;

ரியல்-டைம் ஆர்டி பிசிஆர் அடிப்படையிலான சோதனைக்கூடங்கள் ; 584 ( அரசு-366+ தனியார்- 218)

ட்ரூநேட் அடிப்படையிலான சோதனைக் கூடங்கள்; 412 ( அரசு- 381+ தனியார்-31)

சிபிஎன்ஏஏடி அடிப்படையிலான சோதனைக் கூடங்கள்; 91( அரசு-33+ தனியார்-58)

‘’சோதனை, கண்டுபிடித்தல், சிகிச்சை அளித்தல்’’ உத்தியின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்படும் மக்களை மையப்படுத்திய பல்வேறு நடவடிக்கைகள் கோவிட்-19 சோதனையில் காணப்பட்ட இடையூறுகளை அகற்றியுள்ளது. மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் மேற்கொள்ளப்படும் பரவலான பரிசோதனை வசதிகள் காரணமாக, ஒவ்வொரு நாளும் சோதிக்கப்படும் மாதிரிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில், 2,42,383 மாதிரிகள் சோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை , மொத்தம் 95,40,132 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

கோவிட்-19 தொற்றுக்கான மருத்துவ சிகிச்சை மேலாண்மை விதிமுறைகள் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் அவ்வப்போது மேம்படுத்தப்பட்டு வருகிறது.

மேம்படுத்தப்பட்ட தகவல்களை பின்வரும் தளத்தில் காணலாம்;

https://www.mohfw.gov.in/pdf/UpdatedClinicalManagementProtocolforCOVID19dated03072020.pdf

கோவிட்-19 குறித்த தொழில்நுட்ப விஷயங்கள், வழிகாட்டுதல்கள், அறிவுரைகள் பற்றிய அனைத்து அதிகாரபூர்வ , அண்மைத் தகவல்களுக்கு தயவுசெய்து இந்தத் தளங்களை அணுகவும்; https://www.mohfw.gov.in/ மற்றும் @MoHFW_INDIA .

தொழில்நுட்பம் தொடர்பான கேள்விகளை technicalquery.covid19[at]gov[dot]in என்ற தளத்துக்கு அனுப்பலாம். மற்ற கேள்விகளுக்கு ncov2019[at]gov[dot]in மற்றும் @CovidIndiaSeva என்ற தளங்களை அணுகலாம்.

கோவிட்-19 பற்றிய தகவல் ஏதேனும் தேவையென்றால், தொடர்பு கொள்ள வேண்டிய மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சகத்தின் உதவி மைய எண்கள்; +91-11-23978046 or 1075  (கட்டணமில்லா தொலைபேசி). மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் உதவி மைய எண்கள் பட்டியல் https://www.mohfw.gov.in/pdf/coronvavirushelplinenumber.pdf என்ற தளங்களில் கிடைக்கும்.

****


(Release ID: 1636502) Visitor Counter : 189