சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கர்நாடக ஆஷா: ஒரு சமூக சுகாதார ஆர்வலரின் உண்மையான உணர்வை வெளிப்படுத்துகிறது

Posted On: 03 JUL 2020 2:08PM by PIB Chennai

அன்னபூர்ணா, கர்நாடகாவின் சிவமோகா மாவட்டத்தில் துங்கநகரில் பணிபுரியும் அங்கீகரிக்கப்பட்ட சமூக ஆர்வலர் (ஆஷா) ஆவார். குடிசைப் பகுதியில் 3000 மக்கள் தொகையை உள்ளடக்கிய பகுதியில் உள்ளவர்களுக்காக, 2015 முதல், தேசிய சுகாதாரப் பணியின் ஒரு பகுதியாக நகர்ப்புற ஆஷா அறிமுகப்படுத்தப்பட்டதில் அங்கு பணியாற்றி வருகிறார், கோவிட் – 19 கட்டுபடுத்துதல் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக அவரது முக்கியப் பணிகளில் ஒன்று வீட்டு கணக்கெடுப்புகளை நடத்துவதாகும்.

 

கோவிட் -19 ஐ எதிர்ப்பதில் மாநிலத்தின் வெற்றியில் கர்நாடகாவின் 42,000 ஆஷாக்கள் ஒரு முக்கியமான தூணாக உருவெடுத்துள்ளனர். அவர்கள் கோவிட் – 19 நோய் தொற்று வீட்டுக் கணக்கெடுப்புகளில் தீவிரமாக பங்கேற்று வருகின்றனர், மேலும் கோவிட் – 19 அறிகுறிகளுக்காக மாநிலங்களுக்கு இடையேயான பயணிகள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் சமூகத்தில் உள்ள மற்றவர்களுக்கும் நோய் சார்ந்த அறிகுறிகள் உள்ளதா என பரிசோதனையிடுகின்றனர். குறிப்பிட்ட மக்களிடையே கோவிட் - 19 நோய் தொற்று  அதிகரித்த பாதிப்பை உணர்ந்து, கணக்கெடுப்பில் வயதானவர்களின் வீடுகளை அடையாளம் கண்டதுடன், அவர்களில் இணை நோயுள்ளவர்களையும் மற்றும் நோயெதிர்ப்பு சக்தி இல்லாது தனித்து வாழ்ந்தவர்கள் உள்ளிட்ட சுமார் 1.59 கோடி குடும்பங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளும் பரிசோதனைகளையும் மேற்கொண்டனர். ஆஷாக்கள் தங்கள் பகுதியில் இதுபோன்ற அதிக ஆபத்தில் உள்ளவர்களை ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ந்து கண்காணிக்கின்றனர், கட்டுப்பாட்டு மண்டலங்களில் ஒரு நாளைக்கு ஒரு முறை என்றும் மற்ற பகுதிகளில் 15 நாட்களுக்கு ஒரு முறை என அவர்கள் கண்காணிக்கும் கால இடைவெளி மாறுபடும். சளியுடன் காய்ச்சல், கடுமையான சுவாச பிரச்சனைகள் அறிகுறிகள் உள்ளதாக கூறும் நபர்களின் வீடுகளையும், மாநில சுகாதாரத் துறை உதவி எண்களை அழைத்த அதிக ஆபத்துள்ள நபர்களின் வீடுகளையும் அவர்கள் பார்வையிடுகிறார்கள்.

 

*****



(Release ID: 1636150) Visitor Counter : 234