பிரதமர் அலுவலகம்

கொரியப் போர் நடைபெற்று 70 ஆண்டுகள் ஆவதையொட்டி அந்நாட்டு அதிபருக்கும், மக்களுக்கும் பிரதமர் வாழ்த்து

प्रविष्टि तिथि: 25 JUN 2020 6:22PM by PIB Chennai

கடந்த 1950-ஆம் ஆண்டில் கொரியப் போர் நடைபெற்றது. இந்தப் போர் முடிந்து 70 ஆண்டுகள் ஆவதையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி, கொரிய நாட்டில் அமைதியை நிலைநாட்ட தமது இன்னுயிரை ஈந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.

   போர் முடிந்து 70 ஆண்டு ஆவதை நினைவு கூரும் வண்ணம், கொரிய நாட்டில் உள்ள சியோலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் அனுப்பிய வீடியோ செய்தி திரையிடப்பட்டது.  கொரிய நாட்டு தேசப்பற்றாளர்கள் நல அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சிக்கு அந்நாட்டு அதிபர் திரு மூன் ஜெ-இன் தலைமை வகித்தார். பிரதமர் திரு மோடி, தனது செய்தியில், கொரியப் போரில் இந்தியாவின் பங்களிப்பையும், 60 பாரா ஃபீல்ட் மருத்துவமனை அமைக்கப்பட்டதையும் நினைவு கூர்ந்தார்.   இந்தியாவின் சார்பில் அமைக்கப்பட்ட இந்த மருத்துவமனை போர்க்காலத்தின்போது, பாதிக்கப்பட்ட வீரர்களுக்கும், குடிமக்களுக்கும், அத்தியாவசிய மருத்துவ சேவைகளை சிறப்பாக வழங்கியது. போரினால் பாதிக்கப்பட்டு, தமது உறுதி கடின உழைப்பு  மற்றும் கடப்பாட்டால் சிறந்த நாட்டைக் கட்டமைத்த கொரிய மக்களையும், அந்நாட்டில் அமைதியையும், ஸ்திர தன்மையையும் ஏற்படுத்திய கொரிய அரசையும், பிரதமர் பாராட்டினார். கொரிய நாட்டில் அமைதி நிலைத்திருக்க, இந்திய அரசு மற்றும் மக்களின் நல்வாழ்த்துகளை அவர் தெரிவித்தார்.

     இந்த நிகழ்ச்சியில் அதிபர் திரு மூனுடன்,  கொரிய நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர், பிற அமைச்சர்கள், பல நாடுகளின் தூதர்கள் மற்றும் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

----


(रिलीज़ आईडी: 1634415) आगंतुक पटल : 264
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Manipuri , Bengali , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam