நிதி அமைச்சகம்
சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள், வங்கிசாரா நிதி நிறுவனங்களுக்கான அரசுத் திட்டங்கள் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன - அவசரக் கடன் உத்திரவாத திட்டத்தின் கீழ் வழங்கிய தொகை ரூ.79,000 கோடியை தாண்டியது
Posted On:
23 JUN 2020 2:43PM by PIB Chennai
சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் (MSMEs) வளர்ச்சியில் அரசு தலையீடு விரைவான மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. அரசு மற்றும் தனியார் வங்கிகளின் அவசரக் கடன் உத்திரவாதத் திட்டத்தின் கீழ் ஜூன் 20ஆம் தேதி வரை ரூ.79,000 கோடிக்கு அதிகமான கடன் அனுமதிக்கப்பட்டுள்ளது. இவற்றில் ரூ.35,000 கோடிக்கு மேல் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன.
இத்திட்டத்தின் கீழ் எஸ்பிஐ, எச்டிஎப்சி, பாங்க் ஆப் பரோடா, பஞ்சாப் தேசிய வங்கி, கனரா வங்கி ஆகியவை அதிகளவில் கடன் கொடுத்துள்ளன. இது முடக்கத்துக்குப் பின், 19 லட்சம் சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களும், இதர வர்த்தக நிறுவனங்களும் மீண்டும் தொழில் தொடங்க உதவியுள்ளது. சுயசார்பு இந்தியா நிதியுதவித் திட்டத்தின் ஒரு பகுதியாக, சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் மற்றும் சிறு தொழில்களுக்கு மத்திய அரசு ரூ.3 லட்சம் கோடி மதிப்பிலான கூடுதல் கடன் திட்டங்களை அறிவித்துள்ளது. இதன் மூலம், அந்த நிறுவனங்கள் ஏற்கனவே பெற்ற கடனில் 20 சதவீதம் அளவுக்குக் கூடுதல் கடன் பெறலாம்.
கடந்த மார்ச்-ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்ட ரிசர்வ் வங்கியின் சிறப்புப் பணப்புழக்க வசதித் திட்டத்தின் கீழ், சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் மற்றும் சிறிய வணிகர்களுக்கு கடன் வழங்க வங்கிசாரா நிதி நிறுவனங்கள், சிறிய நிதி நிறுவனங்கள், வங்கிகளுக்கு, இந்திய சிறுதொழில் வளர்ச்சி வங்கி (SIDBI) ரூ.10,220 கோடி கடன் வழங்கியது. வீட்டு வசதி நிதி நிறுவனங்களுக்கு, தேசிய வீட்டு வசதி வங்கி (NHB) ரூ.10,000 கோடி வழங்கியது. தற்போதுள்ள திட்டங்களுடன் கூடுதலாக SIDBI, NHB ஆகியவை ரூ.30,000 கோடி கடன் வழங்கியள்ளன.
வங்கிசாரா நிதி நிறுவனங்கள் மற்றும் சிறிய நிதி நிறுவனங்களுக்கு நீட்டிக்கப்பட்ட கடன் உத்திரவாதத் திட்டத்தின் கீழ், மேலும் உதவிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இவற்றுக்கான அனுமதி ரூ.5000 கோடியைத் தாண்டியுள்ளது. மற்றொரு ரூ.5000 கோடி பண பரிவர்த்தனைக்கான அனுமதி, பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருப்பதால், பரிசீலனையில் உள்ளது.
(Release ID: 1633705)
Visitor Counter : 471
Read this release in:
English
,
Gujarati
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Odia
,
Telugu
,
Malayalam