சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
கொவிட்-19 அண்மைத் தகவல்கள்
உலகிலேயே ஒரு லட்சம் மக்களுக்கும் குறைவான அளவில் பாதிக்கப்பட்டவர்கள் உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று. குணமடைந்தவர்களுக்கும், நோயாளிகளுக்கும் இடையேயான இடைவெளி தொடர்ந்து அதிகரிக்கிறது
Posted On:
22 JUN 2020 1:12PM by PIB Chennai
அதிக மக்கள் தொகை இருந்தும், தொற்று பாதிக்கப்பட்டவர்கள் ஒரு லட்சம் பேருக்கும் குறைவாக இருக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று என ஜூன் 21, 2020ஆம் தேதி வெளியிடப்பட்ட உலக சுகாதார மையத்தின் 153வது நிலவர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஒரு லட்சம் பேருக்கு பாதிக்கப்பட்டோர் அளவு 30.04 ஆக உள்ளது. ஆனால், உலக அளவில் பாதிக்கப்பட்டோரின் சராசரியோ, இந்தியாவை விட 3 மடங்குக்கும் அதிகமாக 114.67 என்ற அளவில் உள்ளது. அமெரிக்காவில் பாதிப்பு அளவு ஒரு லட்சம் பேருக்கு 671.24 ஆக உள்ளது. ஜெர்மனி, ஸ்பெயின், மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் முறையே 583.88, 526.22 மற்றும் 489.42 என்ற அளவில் உள்ளது.
கொவிட்-19 தடுப்பு, கட்டுப்பாடு மற்றும் நிர்வாகத்தில், மத்திய அரசு மாநில அரசுகளுடன் இணைந்து தரமான, ஆக்கப்பூர்வமான அணுகு முறையை முன்கூட்டியே பின்பற்றியது, இந்த எண்ணிக்கை குறைவுக்கு சாட்சியமாக உள்ளது.
இதுவரை, மொத்தம் 2,37,195 நோயாளிகள் கொவிட்-19 பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில், மொத்தம் 9,444 கொவிட்-19 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். குணமடையும் வீதம் 55.77 சதவீதமாக உள்ளது.
தற்போது, 1,74,387 நோயாளிகள் தீவிர மருத்துவக் கண்காணிப்பிலும், சிகிச்சையிலும் உள்ளனர். குணமடைந்தவர்களுக்கும், கோவிட்-19 நோயாளிகளுக்கும் இடையேயான வித்தியாசம் தொடர்ந்து அதிகரித்து வருவதை கீழேயுள்ள வடைபடம் மூலம் பார்க்கலாம். இன்று குணமடைந்தவரகளின் எண்ணிக்கை, மருத்துவ மனையில் சேர்ந்த நோயாளிகளின் எண்ணிக்கையை விட 62,808 கடந்தது.
கொவிட்-19 பரிசோதனைக் கட்டமைப்பும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அரசு பரிசோதனைக் கூடங்களின் எண்ணிக்கை 723 ஆகவும், தனியார் பரிசோதனைக் கூடங்களின் எண்ணிக்கை 262 ஆகவும், ஆக மொத்த 985 ஆக அதிகரித்துள்ளன. இதன் நிலவரம் கீழ்க்கண்டபடி உள்ளது:
Real-Time RT PCR அடிப்படையிலான பரிசோதனைக் கூடங்கள்: 549 (அரசு: 354+ தனியார்: 195)
TrueNat அடிப்படையிலான பரிசோதனைக் கூடங்கள்: 359 (அரசு:341+தனியார்: 18)
CBNAAT அடிப்படையிலான பரிசோதனைக் கூடங்கள்: 77 (அரசு: 28+தனியார்: 49)
ஒரு நாளைக்கு பரிசோதிக்கப்படும் மொத்த மாதிரிகளின் எண்ணிக்கையும், தொடர்ந்து அதிகரிக்கிறது, அதே போல், பரிசோதிக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில், 1,43,267 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் இதுவரை பரிசோதிக்கப்பட்ட மொத்த மாதிரிகளின் எண்ணிக்கை 69,50,493.
(Release ID: 1633318)
Visitor Counter : 288
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam