ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்

காரீப் பருவத்தில் உரங்கள் தடையின்றி வழங்கப்படுவதை உறுதி செய்வதற்காக, காணொளி மூலம் உர நிறுவனங்களை கவுடா சந்தித்து பேசினார்.

Posted On: 16 JUN 2020 5:09PM by PIB Chennai

காரீப் விதைப்புப் பருவத்தில் விவசாயத்திற்கு உரங்கள் போதுமான அளவில் வழங்கப்படுவதை உறுதிசெய்வதற்காக மத்திய வேதியியல் மற்றும் உரங்களுக்கான அமைச்சர் திரு. டி. வி. சதானந்த கவுடா இன்று காணொளி மூலம் உரத்தொழிலின் அனைத்துப் பங்குதாரர்களையும் சந்தித்துப் பேசினார். மத்திய இணை அமைச்சர் திரு. மான்சுக் மண்டவியாவும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய திரு. கவுடா, கொரோனா தொற்று நோயின் மோசமான தாக்கத்தைக் கட்டுப்படுத்த அரசாங்கத்துடன் ஒத்துழைத்த அனைத்து தொழில் தலைவர்களுக்கும் நன்றி தெரிவித்தார். வரும் காரீப் பருவத்தில் தேவையான அளவு உரங்கள் கிடைப்பதை மத்திய அமைச்சகம் உறுதி செய்துள்ளதாக கவுடா தெரிவித்தார். அனைத்து இடர்பாடுகளையும் தாண்டி தங்களின் உற்பத்தி மையங்களை இயக்கியதற்காக திரு. கவுடா பாராட்டு தெரிவித்தார்.

காரீப் பருவம் தொடங்கியுள்ளதை அடுத்து நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் விவசாயப் பணிகள் தொடங்கிவிட்டது.  இந்த ஆண்டு நாம் நல்ல மழையை எதிர்பார்க்கலாம். அதனால், இந்த ஆண்டும் உரத்தின் தேவை அதிகமாக இருக்கும் என்பதை அவர் எடுத்துக்கூறினார். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதத்தில் யூரியா மற்றும் பாஸ்பரஸ்-பொட்டாசியம் உரத்தின் விற்பனை கணிசமாக உயர்ந்துள்ளது என்று அவர் கூறினார்.

இந்த காரீப் பருவத்தில் உரத்தின் தேவை 170 லட்சம் மெட்ரிக் டன்னாக இருக்கும் அதே சமயம் உற்பத்தி 133 லட்சம் மெட்ரிக் டன்னாக இருக்கும். இந்த வேறுபாடு இறக்குமதி மூலம் சரிசெய்யப்படும், என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த சந்திப்பில் பங்கேற்ற நிறுவனங்கள் தங்களின் ஆலோசனைகளையும், தங்கள் சந்திக்கும் பிரச்சினைகளையும் குறித்துப் பகிர்ந்துக்கொண்டனர். 

****



(Release ID: 1631941) Visitor Counter : 197