பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்

பக்ஜன் எரிவாயுக் கசிவு மற்றும் தீ விபத்து – பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை மற்றும் அமெரிக்க எரிசக்தித் துறை ஆலோசனை.

Posted On: 13 JUN 2020 8:16PM by PIB Chennai

அஸ்ஸாம் மாநிலம் தின்சுகியா மாவட்டம், பக்ஜன் பகுதியில் ஆயில் இந்தியா நிறுவனத்திற்குச் சொந்தமான எண்ணெய்க் கிணறில், 12 ஜுன் 2020 அன்று ஏற்பட்ட எரிவாயுக் கசிவையும், தீயையும் கட்டுப்படுத்துவது குறித்து, மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை உயரதிகாரிகள், எண்ணெய் நிறுவனங்கள், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகமான .என்.ஜி.சி.யின் உயரதிகாரிகள், நெருக்கடி மேலாண்மைக் குழுவினர் மற்றும் இதர நிபுணர்கள், அமெரிக்க எரிசக்தித்துறை உயரதிகாரிகள், அமெரிக்காவைச் சேர்ந்த எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விபத்துத் தடுப்பு நிபுணர்களுட்ன் விரிவான ஆலோசனை நடத்தியுள்ளனர்.

  • நிகழ்ந்த இது போன்ற விபத்துக்களின் போது, தாங்கள் அறிந்து கொண்ட அனுபவங்களை அந்நாட்டு அதிகாரிகள், இந்திய அதிகாரிகளுடன் பகிர்ந்து கொண்டனர். எரியும் தீயைக் கட்டுப்படுத்துவது மற்றும் எண்ணெய்க் கிணற்றை மூடுவதற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகள் பற்றிய அனைத்து விவரங்களையும், தீ பரவுவதைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், நீர் மேலாண்மை முறை, கழிவுகளை அகற்றுதல், ட்ரோன் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துதல் மற்றும் கிணற்றை மூடுவதற்கான இறுதிக்கட்ட நடவடிக்கைகள் குறித்தும் இந்திய அதிகாரிகள் எடுத்துரைத்தனர். இந்திய எண்ணெய் நிறுவனம் மற்றும் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்தின் சார்பில் இதுவரை மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள், முறையாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்த அமெரிக்க எரிசக்தித்துறை அதிகாரிகளும், நிபுணர்களும் தீ அணைப்பு மற்றும் எண்ணெய்க் கிணற்றை மூடுவதற்கான செயல்திட்டங்கள் சரியானவையே என்றும் கூறியுள்ளனர். இரு தரப்பினரும், வரும் நாட்களில் மீண்டும் கருத்துப் பரிமாற்றம் செய்வதுடன், தீப்பற்றி எரியும் எண்ணெய்க் கிணற்றை மூடுவது குறித்து விவாதிக்கவும் முடிவு செய்துள்ளனர். எரிசக்தித் துறையில், இந்தியா அமெரிக்கா இடையிலான நீடித்த ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக, இந்த ஆலோசனைகள் நடத்தப்பட்டுள்ளது.

*****(Release ID: 1631497) Visitor Counter : 9