சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கோவிட் 19 பற்றிய சமீபத்திய தகவல்கள்.
குணமடைவோர் சதவிகிதம் 49..95% ஆக அதிகரிப்பு.

Posted On: 13 JUN 2020 4:26PM by PIB Chennai

குணமடைந்திருக்கிறார்கள். இதையடுத்து இதுவரை மொத்தம் ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 329 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். நோயாளிகளில் குணமடைவோர் சதவிகிதம் 49..95. ஆக அதிகரித்துள்ளது. தற்போது ஒரு லட்சத்து 45 ஆயிரத்து 779 பேர், கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் மருத்துவக் கண்காணிப்பின் கீழ் உள்ளனர்.

 

நோய்த்தொற்று உள்ளவர்களிடையே நோல் கொரோனா வைரஸ் உள்ளதா என்பதைக் கண்டறிவதற்கான பரிசோதனை செய்யும் திறனை இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ICMR) தொடர்ந்து  விரிவுபடுத்தி வருகிறது. பரிசோதனை செய்வதற்கான அரசு ஆய்வுக்கூடங்கள் 642 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. தனியார் ஆய்வுக்கூடங்கள் 243 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது (மொத்தம் 885). கடந்த 24 மணி நேரத்தில் ஒரு லட்சத்து 43 ஆயிரத்து 737 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை பரிசோதிக்கப்பட்ட மொத்த மாதிரிகள் 55,07,182..

 

அமைச்சகத்தால் வெளியிடப்பட்டுள்ள கோவிட்-9 தொடர்பான மருத்துவ மேலாண்மை குறித்த சமீபத்திய விதிமுறைகள் பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம். https://www.mohfw.gov.in/pdf/ClinicalManagementProtocolforCOVID19.pdf

லேசான, மிதமான, தீவிரமான நிலைமை என்று கோவிட்-19  நோயாளிகளை வகை பிரித்து, அதற்கேற்ப மருத்துவ மேலாண்மை மேற்கொள்வதற்கு இந்தப் புதிய விதிமுறை வழிசெய்கிறது. நோயின் மூன்று கட்டத் தன்மைகளைப் பொறுத்து, நோய்த்தொற்று வராமல் தடுப்பது, கட்டுப்பாட்டு நடைமுறைகள் ஆகியவை குறித்தும் இந்த விதிமுறைகள் கூறுகின்றன. நோயாளிகளில் குறிப்பிட்ட குழுவினருக்கு, ஆய்வு முறையிலான சிகிச்சைகளுக்கும் வழிமுறைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த சிகிச்சை முறைகளைப் பரிந்துரைப்தற்கு முன்னால், தகவல்களின் அடிப்படையில் பகிர்ந்து எடுக்கப்பட்ட முடிவெடுப்பது மிகவும் முக்கியம்.

 

 

கோவிட்-19 தொடர்பான உண்மையான, தற்போதைய தகவல்கள் பற்றியும், கோவிட்-19 தொடர்பான தொழில்நுட்ப விஷயங்கள், விதிமுறைகள் மற்றும் அறிவுரைகள் பற்றியும் தெரிந்து கொள்ள, வருகை தருக: https://www.mohfw.gov.in/ மற்றும் @MoHFW_INDIA.


கோவிட்-19 தொடர்பான தொழில்நுட்ப விஷயங்கள் தொடர்பான வினாக்களை அனுப்புவதற்கான மின்னஞ்சல் முகவரி: technicalquery.covid19@gov.in

கோவிட்-19 தொடர்பான இதர விஷயங்கள் தொடர்பான வினாக்களை அனுப்புவதற்கான மின்னஞ்சல் முகவரி: ncov2019@gov.in மற்றும் @CovidIndiaSeva

கோவிட்-19 தொடர்பா மத்திய சுகாதார, குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் உதவிக்கான தொலைபேசி எண்:+91-11-23978046 or 1075

கோவிட்-19 தொடர்பா மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் உதவிக்கான தொலைபேசி எண்கள் பட்டியல்: https://www.mohfw.gov.in/pdf/coronvavirushelplinenumber.pdf .

 

 

****(Release ID: 1631408) Visitor Counter : 19