ஆயுஷ்
‘எனது வாழ்க்கை, எனது யோகா’ வீடியோ போட்டிக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் 21 ஜுன் 2020 வரை நீட்டிப்பு.
प्रविष्टि तिथि:
13 JUN 2020 10:14AM by PIB Chennai
- திரு.நரேந்திரமோடியால் அண்மையில் அறிவிக்கப்பட்ட ‘ எனது வாழ்க்கை, எனது யோகா’ வீடியோ போட்டிக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் 21 ஜுன் 2020 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 6-வது சர்வதேச யோகா தினத்தையொட்டி, மத்திய ஆயுஷ் அமைச்சகமும், இந்திய கலாச்சார ஆராய்ச்சிக் கவுன்சிலும் இணைய வழியிலான இந்த சர்வதேச போட்டிக்கு, கூட்டாக ஏற்பாடு செய்துள்ளன.
முன்னதாக, இந்தப் போட்டிக்கான வீடியோக்களை அனுப்புவதற்கான கடைசி தேதி 15 ஜுன் 2020 என அறிவிக்கப்பட்டிருந்தது. போட்டிக்கான வீடியோ காட்சிகளைத் தயாரிக்க கூடுதல் அவகாசம் அளிக்குமாறு, இந்தியாவிலிருந்தும், பிற நாடுகளிலிருந்தும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அதன் பேரில், மத்திய ஆயுஷ் அமைச்சகமும், இந்திய கலாச்சார ஆராய்ச்சிக் கவுன்சிலும் , வீடியோக்களை அனுப்புவதற்கான அவகாசத்தை சர்வதேச யோகா தினமான ஜுன் 21 வரை நீட்டிக்க முடிவு செய்துள்ளன.
- மாதம் 31-ஆம் தேதியன்று மனதின் குரல் நிகழ்ச்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர், அனைத்து தரப்பினரும் ‘ எனது வாழ்க்கை, எனது யோகா’ என்ற தலைப்பிலான இந்த வீடியோ போட்டியில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்திருந்தார். தனி நபர்களின் வாழ்க்கையில் யோகா-வால் ஏற்படும் மாற்றங்களை சித்தரிக்கும் விதமாகவும், 6-வது சர்வதேச யோகா தினக் கொண்டாட்டங்களின் ஒரு அம்சமாக திகழும் வகையிலும் இந்தப் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- பங்கேற்போர் , 3 நிமிடம் ஓடக் கூடிய அளவில் 3 யோகா பயிற்சி (க்ரியா, ஆசனம், பிராணாயாமா, பாந்தா அல்லது முத்ரா) பற்றிய காட்சிகளை வீடியோ குறும்படமாகத் தயாரித்து, தங்களது வாழ்க்கையில் யோகா எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தியது என்பது பற்றிய சிறு குறிப்புடன் அனுப்ப வேண்டும். இந்த வீடியோ காட்சிகளை ஃபேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் அல்லது மைகவ் (MyGov) இணையதளம் வாயிலாக , போட்டிக்கான ஹாஷ்டேகான #MyLifeMyYogaINDIA உடன் அந்தந்தப் பிரிவுகளில் அனுப்பிவைக்க வேண்டும். போட்டியில் பங்கேற்பது பற்றிய விரிவான விவரங்கள், ஆயுஷ் அமைச்சகத்தின் ( https://yoga.ayush.gov.in/yoga/) இணையதளத்தில் இடம்பெற்றுள்ளன.
- போட்டி இரண்டு கட்டங்களாக நடத்தப்படும். முதல் கட்டத்தில், இந்திய அளவிலான வீடியோ காட்சிகள் பரிசீலிக்கப்பட்டு, வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கு அடுத்தபடியாக, பல்வேறு நாடுகளிலிருந்து வரப்பெற்ற வீடியோ காட்சிகள் பரிசீலிக்கப்பட்டு, சர்வதேச அளவிலான பரிசுக்குரியவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். யோகா கலை, தனி நபர்களின் வாழ்க்கை மற்றும் போட்டியின் பங்கேற்பாளர்களிடம் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை வெளிப்படுத்தும் விதமாகவும், இந்தப் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
போட்டியாளர்கள் மூன்று பிரிவுகளாக, அதாவது இளையோர் (18 வயதிற்கு கீழ்), வயது வந்தோர் (18 வயதிற்குமேல்) மற்றும் யோகா வல்லுநர்களிடமிருந்து, ஆண்கள் மற்றும் பெண்களுக்கென தனித்தனி பிரிவாக வீடியோ காட்சிகளை அனுப்ப வேண்டும். இந்தியப் போட்டியாளர்களுக்கான பரிசுத்தொகை இந்திய நாணய மதிப்பில் வழங்கப்படும்.
- , ஒவ்வொரு பிரிவிலும், முதல், 2-வது மற்றும் 3-வது பரிசாக முறையே, ஒரு லட்சம், 50 ஆயிரம் மற்றும் 25 ஆயிரம் ருபாய் வழங்கப்படும். சர்வதேச அளவில் முதல், 2-வது மற்றும் 3-வது பரிசாக முறையே, 2,500 அமெரிக்க டாலர்கள், 1,500 டாலர்கள் மற்றும் 1,000டாலர் வழங்கப்படும்.
- வழங்கப்பட்டுள்ள கால நீட்டிப்பு அவகாசத்தைப் பயன்படுத்தி, அனைவரும், தங்களது வீடியோ காட்சிகளை மேலும் தாமதமின்றி அனுப்பி வைக்குமாறு, மத்திய ஆயுஷ் துறை கேட்டுக்கொண்டுள்ளது.
==============
(रिलीज़ आईडी: 1631349)
आगंतुक पटल : 360