நிதி அமைச்சகம்
சட்டம், செயல்முறை குறித்து சரக்கு மற்றும் சேவை வரிக் குழுவின் பரிந்துரைகள்.
Posted On:
12 JUN 2020 4:08PM by PIB Chennai
சரக்கு மற்றும் சேவை வரிக் குழுவின் (ஜி எஸ் டி கவுன்சில்) 40வது கூட்டம் மத்திய நிதி, பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் தலைமையில் காணொLiக் காட்சி மூலம் இன்று நடைபெற்றது. மத்திய நிதி, பெருநிறுவன விவகாரங்கள் இணை அமைச்சர் திரு. அனுராக் தாகூர், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிதி அமைச்சர்கள், நிதி அமைச்சகம், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் மூத்த அதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
சட்டம் மற்றும் செயல்முறை குறித்து கீழ்கண்ட பரிந்துரைகளை சரக்கு மற்றும் சேவை வரிக் குழு செய்தது.
1. வணிக வசதிக்கான நடவடிக்கைகள்
அ. கடந்த காலத் தாக்கல்களுக்கான தாமதக் கட்டணம் குறைப்பு:
வரித் தாக்கலில் உள்ள நிலுவைகளைக் களையும் விதமாக, ஜூலை, 2017 முதல் ஜனவரி, 2020 வரையிலான வரிக் காலத்துக்கான GSTR-3B படிவத்தை தாக்கல் செய்யாததற்கான தாமதக் கட்டணம் கீழ்கண்டவாறு குறைக்கப்பட்டுள்ளது/தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
1.
i. வரி நிலுவை எதுவும் இல்லாமல் இருக்கும் பட்சத்தில் தாமதக் கட்டணம் கிடையாது.
ii. வரி செலுத்த வேண்டியிருப்பினும், ஒரு தாக்கலுக்கு ரூ 500 என அதிகப் பட்ச தாமதக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
01.07.2020 முதல் 30.09.2020 வரையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அனைத்து GSTR-3B தாக்கல்களுக்கும் குறைக்கப்பட்ட தாமதக் கட்டணம் பொருந்தும்.
1.
ஆ. சிறு வரி செலுத்துவோருக்கு பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் 2020 வரிக் காலங்களுக்கான தாமதக் கட்டணத்தில் இருந்து மேலும் நிவாரணம்:
(மொத்த விற்றுமுதல் ரூ. 5 கோடி வரை இருக்கும்) சிறு வரி செலுத்துவோருக்கு, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் 2020-இல் செய்யப்பட்ட விநியோகங்களுக்கான தாமதத் தாக்கலுக்கான வட்டி விகிதம் (6 ஜூலை வரையிலான தாமதங்களுக்கு) ஒரு வருடத்துக்கு 18 சதவீதத்தில் இருந்து 9 சதவீதமாக 30.09.2020 வரை குறைக்கப்பட்டுள்ளது. வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமென்றால், நிவாரணத்துக்கான குறிப்பிட்ட தேதி வரை (6 ஜூலை வரையிலான தாமதங்களுக்கு) எந்த வட்டியும் வசூலிக்கப்பட மாட்டாது. அதற்கு பிறகும் 30.09.2020 வரை 9 சதவீதம் வட்டி தான் வசூலிக்கப்படும்.
1.
இ. அதற்குப் பிறகான வரிக் காலங்களுக்கு (மே, ஜூன், ஜூலை, 2020) சிறு வரி செலுத்துவோருக்கு நிவாரணம்:
கொவிட்-19 பெருந்தொற்றைக் கருத்தில் கொண்டு, மொத்த விற்றுமுதல் ரூ. 5 கோடி வரை இருக்கும் வரி செலுத்துவோருக்கு, மே, ஜூன் மற்றும் ஜூலை 2020 மாதங்களில் செய்யப்பட்ட விநியோகங்களுக்கான GSTR-3B படிவத்தின் தாமதத் தாக்கலுக்கான கட்டணம் மற்றும் வட்டி, செப்டம்பர் மாதத்துக்குள் தாக்கல் செய்யப்பட்டால் ரத்து செய்யப்பட்டு, மேலும் நிவாரணம் அளிக்கப்படுகிறது (தாமதத் தேதிகள் அறிவிக்கப்படும்).
1.
ஈ. பதிவு ரத்து செய்யப்பட்டதைத் திரும்பப் பெறுதலுக்கான காலம் ஒரு முறை நீட்டிக்கப்படுகிறது
தங்களது ரத்து செய்யப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரிப் பதிவுகளை நேரத்தில் சரி செய்ய முடியாத வரி செலுத்துவோரின் வசதிக்காக, பதிவு ரத்து செய்யப்பட்டதை திரும்பப் பெறுவதற்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்க 30.09.2020 வரை ஒரு வாய்ப்பு அளிக்கப்படுகிறது. 12.06.2020 வரை ரத்து செய்யப்பட்ட பதிவுகளுக்கு இது பொருந்தும்.
2. மத்திய சரக்கு மற்றும் சேவை வரி சட்டம் 2017 மற்றும் ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரி 2017 ஆகியவற்றில் மாற்றம் செய்யும் நிதி சட்டம் 2020-இன் சில உட்பிரிவுகள் 30.06.2020 முதல் அமலுக்குக் கொண்டு வரப்படும்.
***
(Release ID: 1631191)
Visitor Counter : 335
Read this release in:
Gujarati
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Odia
,
Telugu
,
Malayalam