ரெயில்வே அமைச்சகம்

மாநிலங்கள் கோரிக்கையின்பேரில் ஷ்ராமிக் சிறப்பு ரயிலை இந்திய ரயில்வே இயக்கும்

Posted On: 09 JUN 2020 5:07PM by PIB Chennai

மாநிலங்களுக்குத் தேவைக்குத் தகுந்தபடி புலம்பெயர் தொழிலாளர்களை வசதியாகவும் பாதுகாப்பாகவும் கொண்டு செல்ல ஷ்ராமிக் சிறப்பு ரயில் சேவையை இந்திய ரயில்வே தொடரவுள்ளது.

இதுவரை, 4347க்கும் மேற்பட்ட ஷ்ராமிக் சிறப்பு ரயில் மூலம்  இந்திய ரயில்வே சுமார் 60 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்களை தங்கள் இலக்கு மாநிலங்களுக்குக் கொண்டு சேர்த்துள்ளது. 2020 மே 1 முதல் ஷ்ராமிக் ரயில்கள் இயக்கப்படுகின்றன.

     மாநிலங்கள் தங்கள் கோரிக்கையை சமர்பித்த 24 மணி நேரத்தில் ஷ்ராமிக் சிறப்பு ரயில் சேவை அளிக்கப்படும் என்று இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.  இது தொடர்பாக இந்திய ரயில்வே வாரியத்தின் தலைவர் அனைத்து மாநிலங்களுக்கும் மே 29 மற்றும் ஜூன் 3 ஆம் தேதி கடிதம் எழுதியுள்ளார். இதனை மீண்டும் வலியுறுத்தி அனைத்து மாநில தலைமை செயலர்களுக்கும் இன்று கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

 

***


(Release ID: 1630505)