சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கொவிட்-19 குறித்த அண்மைச் செய்திகள்


பொது மற்றும் பாதி பொது சுற்றுச்சூழல் அமைப்புகள் சமூகப் பொருளாதார நடவடிக்கைகளை இயக்குவதற்கான சலுகைகள் வெளியீடு

Posted On: 05 JUN 2020 2:11PM by PIB Chennai

ஊரடங்கை தேவைகளுக்கேற்ப படிப்படியாகவும், முன்கூட்டியும், செயல்பாட்டு அணுகுமுறையுடனும் இந்தியா தளர்த்தி வரும் நிலையில், கொவிட்-19 பெருமளவில் பரவுவதற்கான வாய்ப்புகள் உள்ள இடங்களில், பொது மற்றும் பாதி பொது சுற்றுச்சூழல் அமைப்புகள் இயங்குவதற்கான நிலையான நடைமுறைகளை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம் வெளியிட்டுள்ளது. சமூகப் பொருளாதார நடவடிக்கைகள் தொடங்க அனுமதிக்கும் போது, தொற்று பரவும் சங்கிலியை தகர்ப்பதை நோக்கமாகக் கொண்டு புதிய விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

 

அலுவலகங்களில் கொவிட்-19 பரவுவதைக் கட்டுப்படுத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கான நிலையான செயல்பாட்டு நடைமுறைகளைக் காண இங்கு அணுகவும். https://www.mohfw.gov.in/pdf/1SoPstobefollowedinOffices.pdf

 

வழிபாட்டு இடங்களில் கொவிட்-19 பரவுவதைக் கட்டுப்படுத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கான நிலையான செயல்பாட்டு நடைமுறைகளைக் காண இங்கு அணுகவும் https://www.mohfw.gov.in/pdf/2SoPstobefollowedinReligiousPlaces.pdf

 

உணவகங்களில் கொவிட்-19 பரவுவதைக் கட்டுப்படுத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கான நிலையான செயல்பாட்டு நடைமுறைகளைக் காண இங்கு அணுகவும் https://www.mohfw.gov.in/pdf/3SoPstobefollowedinRestaurants.pdf

வணிக வளாகங்களில் கொவிட்-19 பரவுவதைக் கட்டுப்படுத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கான நிலையான செயல்பாட்டு நடைமுறைகளைக் காண இங்கு அணுகவும் https://www.mohfw.gov.in/pdf/4SoPstobefollowedinShoppingMalls.pdf

 உணவு விடுதிகள் மற்றும் இதர விருந்தோம்பல் இடங்களில் கொவிட்-19 பரவுவதைக் கட்டுப்படுத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கான நிலையான செயல்பாட்டு நடைமுறைகளைக் காண இங்கு அணுகவும் https://www.mohfw.gov.in/pdf/5SoPstobefollowedinHotelsandotherunits.pdf

 

கொவிட்-19 பெருந்தொற்று காரணமாக, சிஎஸ் (எம்ஏ) பயனாளிகளுக்கான புறநோயாளி மருந்துகளுக்கான தொகையை மீண்டும் பெறுவதற்கான புதிய விதிமுறைகளை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதனை இங்கு அணுகலாம். https://www.mohfw.gov.in/pdf/OPDmedicinesspecialsanctionCOVID.pdf

கடந்த 24 மணி நேரத்தில், மொத்தம் 5,355 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். இதையும் சேர்த்து, இதுவரை, மொத்தம் 1,09,462 நோயாளிகள் கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். கொவிட் நோயாளிகளில் குணமடைந்தவர்களின் விகிதம் 48.27 சதவீதம். தற்போது 1,10,960 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் தீவிர மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனர்.

அரசு பரிசோதனைக் கூடங்களின் எண்ணிக்கை தற்போது 507 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. தனியார்  ஆய்வுக்கூடங்களும் 217 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.( மொத்தம் 727 பரிசோதனக்கூடங்கள்). 1,43, 661 மாதிரிகள் கடந்த 24 மணி நேரத்தில் பரிசோதிக்கப்பட்டுள்ளன. மொத்தம் பரிசோதிக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 43,86,379.

2020 ஜூன் 5-ஆம் தேதி வரை, கொவிட் தொடர்பான சுகாதாரக் கட்டமைப்பு, 957 கொவிட் தொற்றுக்கான மருத்துவமனைகளில், 1,66,460 தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகள், 21,473 தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகள், 72,497 பிராண வாயு ஆதரவுடன் கூடிய படுக்கைகளுடன் வலுப்படுத்தப்பட்டுள்ளன. 1,32,593 தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகள், 10,903  தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகள், 45,562 பிராணவாயு ஆதரவுடன் கூடிய படுக்கைகளுடன், கொவிட் தொற்று மருத்துவத்துக்கென 2,362  சுகாதார மையங்களும் இயங்கி வருகின்றன. 11,210 தனிமைப்படுத்தப்பட்ட மையங்கள், 7,529 கொவிட் சுகாதார மையங்கள், 7,03,786 படுக்கைகளுடன், நாட்டில் கொவிட்-19 தொற்றை முறியடிக்க தற்போது தயார் நிலையில் உள்ளன. இதுவரை, மத்திய அரசு, 128.48 லட்சம் என்-95 முகக்கவசங்கள், 104.74 லட்சம் தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் ஆகியவற்றை மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள், மத்திய நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளது.


(Release ID: 1629712) Visitor Counter : 293